எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஆலோசனைகளைப்பெற்று முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முயற்சி
மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் சம்பந்தமாக துறைசார்ந்தவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்று அதன் முன்மொழிவுகளை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் எம்.எல். செய்யது அஹமத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்திற்கு துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நொவெம்பெர் 02ஆம் திகதிக்கு முன்னர் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கை நாடாளுமன்றத்தினால் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபை திருத்தச் சட்டத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகுதி அடிப்படையில் 06 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக அம்மாவட்டம் 6 தொகுதிகளாகப் பிரிக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே இம்மாவட்டம் கல்குடா, மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு என மூன்று தொகுதிகளையும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்யக் கூடிய நிருவாக மாவட்டமாக இருந்து வருகிறது.
0 Comments:
Post a Comment