முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நதி ஒதுக்கீட்டிலிருந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 9 விளையாட்டுக் கழகங்களுக்கு 150000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டன.களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தில் வைத்து இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.சத்தியகௌரி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பாக்கியராசா மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment