யாழ்.நூலகத்தை எவ்வாறு வடக்கு மக்கள் பயன்படுத்தி பயன்பெற்றார்களோ அதே போன்று அதற்கு நிகரானதொரு நூலகத்தை நான் கட்டுவதற்குரிய வேலையை நான் முன்னெடுப்பேன்.அதாவது மட்டக்களப்பு நகரில் இடைநடுவில் கைவிடப்பட்ட மட்டக்களப்பு நூலகத்தை முழுமையான நிதிப்பங்களிப்புட மிகவிரைவில் கட்டிக்கொடுப்பதற்குரிய திட்டமிடல் மேற்கொள்ளுவேன் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (27) அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே மேலுல்லவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலே… இந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியானது இலங்கையிலே முதன்மையானதும், பாரம்பரியதுமான பாடசாலை ஆகும். இப்பாடசாலையின் தேவைகளையும்,குறைபாடுகளையும் தங்குதடையின்றி நிறைவேற்றிக் கொடுப்பதில் நான் பின் நிற்கமாட்டேன். அதேபோன்று இப்பாடசாலையின் முன்பக்க வீதியை முழுமையாக மூடி மாணவர்களின் போக்குவரத்து பிரச்சனையை தீர்த்து வைக்கப்படும்.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவகத்தில் உள்ள பாடசாலைகளின் தேவைகளையும்,குறைபாடுகளையும் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் முழுமையாக தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அதே போன்று இப்பாடசாலையின் ஆசிரியர் விடுதியகம் இருக்கும் வளாகத்தில் இலங்கையில் முதன்மையானதும்,தனியானதொரு ஆரம்பக்கல்வி பாடசாலையாகவும் அமைத்து கொடுப்பதற்குரிய என்னால் முடிந்த கைங்கரியத்தை செய்வேன்.
பொதுவாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் போதியளவு குறைபாடுகள் காணப்படுவதை நான் நன்கு அறிந்துள்ளேன். இதனை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு எட்டி வைத்து கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை கொண்டுவருவேன். இன்றைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், பரந்தளவில் காணப்படுகின்றது. அது மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவணையும் இன்று அதிகரித்துள்ளது. மாணவர்களின் கையடக்கதொலைபேசி பாவணையானது வினைத்திறன் மிக்க கல்விச்செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும். அதனை மாணவர்கள் கைவிட வேண்டும்.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தகவல் தொழிநுட்ப கல்விவளர்ச்சி சவாலாக காணப்படுகின்றது.இதனை ஒவ்வொரு மாணவர்களும் எதிர்கொண்டு சவாலை முறியடிக்க வேண்டும். விஞ்ஞானம்,தகவல்தொழிநுட்பம்,புவியியல், சூழலியல், ஆங்கில விருத்தி,நவீன தொழிநுட்பவியல், இலத்திரனியல், கைத்தொழில் விருத்தி போன்றன இன்றைய மாணவசமூகம் தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும்.அவ்வாறு விருத்தியடைந்த கல்விதான் நாட்டின் தேவையாக இருக்கின்றது.
அன்று யாழ்ப்பாண நூலகத்தை பயன்படுத்தி வடக்கு மாணவ சமூகம் சாவால்மிக்க உலகிற்கு ஈடுகொடுத்தார்கள்.அதனால் அந்த சமூகம் முன்னேற்றம் கண்டது.அதே போன்று யாழ்.நூலகத்திற்கு நிகராக மட்டக்களப்பில் கடந்த ஆட்சியாளரினால் கைவிடப்பட்ட மட்டக்களப்பு நூலகம் மீண்டும் சகல வசதிகளுடன் கூடிய நூலகமாக கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment