29 Oct 2017

விமல் வீரவன்சவிடமிருக்கின்ற குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்ய வேண்டும்.

SHARE
இலங்கை ஜனநாயகத்தை மிதிக்கின்ற உச்க்கட்ட செயற்பாட்டினை நிறுத்துவதற்கு விமல் வீரவன்ச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறுகின்ற செயற்பாடானது, இலங்கை ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற விடையமாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். உடன் இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அவர்களை உடன் கைது செய்து அவர்களிடமிருக்கின்ற குண்டுகளைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்து மக்கள் பிரதிநிதிகளைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு  மைச்சினதும், சட்டம் ஒழுங்கு அமைச்சினதும், செயற்பாடாகும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து ஞாயிற்றுக் கிழமை (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்....


நாட்டில் தனி நபர்கள் சட்டத்தை மீறி வெடி குண்டுகளை வைத்திருப்பது இலங்கை ஜனநாயகத்தை மீறுகின்ற செயலாகும் எனவே இவ்வாறானவர்களை உடன் கைது செய்து இவர்களிடமிருக்கின்ற வெடிகுண்டுகளைக் கைப்பற்றி சட்டத்திட்டங்களுக்குட்படுத்த வேண்டும்.

பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கின்றதும். மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்துவதுமான இச்செயற்பாட்டிற்கும் இலங்கையிலுள்ள அதி உச்ச தண்டனையை வழங்கவேண்டும். இவ்வாறு இவர்களுக்குத் தண்டனை வழங்குவதனூடாக சட்டம் யாவருக்கும் சமன் என்பதை உறுத்திபூண்டு நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பயங்கரவாத செயற்பாடுகளைத் தூண்டுபவர்கள், களவாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், போன்றோருக்கு இவை நல்ல பாடமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். என்பதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள்  வருவதற்கு முற்றுப்புள்ளி இடுவதாகவும் அமையும் என தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: