3 Oct 2017

இடிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடத்தில் இரும்புக் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பது ஆபத்தானது கட்டிட நிருமாண வேலைகளை உடனே ஆரம்பிக்குமாறு பெற்றோர் வேண்கோள்

SHARE
இடிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடத்தில் இரும்புக்  கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பது ஆபத்தானது கட்டிட நிருமாண வேலைகளை உடனே ஆரம்பிக்குமாறு பெற்றோர் வேண்கோள்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்முனீறா வித்தியாலயத்தில் புதிய கட்டிட நிருமாணித்திற்காக பழைய மாடிக் கட்டிடம் உடைக்கப்பட்டுள்ள போதும் அதன் இடிபாடுகள் சீராக அகற்றப்படாமல் இரும்புக் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பது மாணவர்களுக்கு ஆபத்தானது என்று  பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இடிபாடுகள் முழுவதுமாக அகற்றப்படாத இந்த நிலைமையிலேயே மாணவர்கள் அந்த இடத்தில் நடமாடவேண்டியுள்ளது.
துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் இன்னமும் அகற்றப்படாதது தமக்குக் கவலையளித்திருப்பதாகவும் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான முதற்கட்ட நிருமாணக் கொடுப்பனவையும் சபந்தப்பட்ட கட்டிட நிருமாண ஒப்பந்தக்காரர் பெற்றுள்ள போதும் ஏன் இன்னமும் நிருமாண வேலைகள் தொடங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.









SHARE

Author: verified_user

0 Comments: