சிறுவர்களும், முதியவர்களும் பின்னிப்பிணைந்த அனுபவங்களாகும், முதியோர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிறுவர்களை அதியசயமிக்க உலகிற்கு இட்டுச் செல்வோம் எனும் தொணிப்பொருளின்கீழும், முதியோர்களின் அனுபவர்களை வைத்துக்கொண்டு வாழுகின்ற எமது சமூகத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டல்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்ற தொணிப் பொருளின் கீழும் சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.த.சத்தியகௌரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு, களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் செவ்வாய் கிழமை (03) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் மேலும் அவர் தெரிவிக்கையில்….
இந்த தினத்தில் மாத்திரம் சிறுவர்களையும், முதியோர்களையும் கௌரவிப்பது மாத்திரமல்ல, எமது சமூகத்தின் எதிர்காலத்திற்காக முதலீடுதான் இன்றைய சிறுவர்கள். எனவே சிறுவர்களும். முதியவர்களும் மிக மிக முக்கியமானவர்கள். இவர்களை தினமும் நாம் கௌரவப்படுத்த வேண்டும்.
இந்தநிலையிலும் சிறுவர் துஸ்பிரயோகங்களும். முதியோர் இல்லங்களிலும் முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருவதாகத்தான் நாம் ஊடகங்கள் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது. இவை இரண்டுமே எமது சமூகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நாளாந்தம் இவர்களை எவ்வாறு முன்னேற்றலாம் என்பது தொடர்பில் எமது உத்தியோகஸ்த்தர்களுக்குத் தெரியும். அதுபோல் பெற்றோர்களுக்கும் உங்களது வகிபாகம் என்னவென்று தெரியவேண்டும். சிறுவர்களின் சுதந்திரம் கெடாமல் அவர்களது நல்ல சிந்தனைகளுக்கு இடமளித்து, எவ்வாறு வழர்க்க வேண்டும் என்ற வகிபாகம் பெற்றோருக்கு உள்ளது. அதுபோன்று தங்களது பெற்றோரையும் கவனிக்க வேணடிய பொறுப்பும் உள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன்போது பட்டிருப்பு தேசியபாடசாலை மாணவர்கள் பாடசாலை முன்றலிலிருந்து சிறுவர் மற்றும் முதியோர் தொடர்பான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இராசமாணிக்கம் மண்டபம்வரை பேரணியாக சென்றடைந்தனர். பின்னர் அங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகளும். சிறுவர் மற்றும் முதியோர் தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றதோடு, பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச செயலகத்தினால் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சிறுவர்கள், முதியோர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment