ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்களில் வறுமைக்குட்பட்ட குடும்பங்கள்pலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை செல்லும் பிள்ளைகளின் போக்குவரத்து நலன் கருதியும் அக்குடும்பத்தில் வாழ்வாதார நோக்கத்திற்கான தேவை கருதியும் 15 குடும்பங்களுக்கு பைசிக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பாம் பவுண்டேஷன்நி(PALM FOUNDATION)றுவனத்தின் திட்ட முகாமையாளர் அருள் சக்தி தெரிவித்தார்.
சொண்டா கிளப் ஐஐஐ கொழும்பு என்ற சேவைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் ஊடாக மகளிரை வலுவூட்டும் நிறுவனம் இந்த பைசிக்கிள்களை வழங்கியிருந்தது.
செங்கலடி பிரதேச செயலகத்தில் ஞாயிறன்று 29.10.2017 இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பதில் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், சொண்டா கிளப் ஐஐஐகொழும்பு கிளையின் செயலாளர் பரீதா லுக்மான்ஜீ, கிவ் ரு லங்கா (புiஎந வழ டுயமெய) நிறுவனத்தின் தவிசாளர் டுலான் டி சில்வா, பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, திட்ட முகாமையாளர் அருள் சக்தி உட்பட இன்னும் பல அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், பயனாளிகளான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நலன்கருதி மட்டக்களப்பின் குடி நீர்த் தேவையுள்ள பிரதேசங்களில் இதுவரை 45 பாடசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள தமது நிறுவனம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதாக பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அருள் சக்தி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment