29 Oct 2017

கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டமையில் குளறுபடிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில்  நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து அவர்களில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட விதத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை 30.10.2017 கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஆர். நிஷாந்தன்@   கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டது இதில் 6880 பட்டதாரிகள் தோற்றி 2868 பட்டதாரிகளே சிதத்தியடைந்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 2868 பேருக்கும் நியமனம் வழங்கும் முகமாக அவர்கள் அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாதிருக்கும் அதேவேளை குறைவான புள்ளிகளைப் பெற்றோர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிலரது பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சிலவேளை 3 தடவைகளும் நேர்முகப் பரீட்சைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது,

4 பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் 4 நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன,

40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.

மாவட்ட ரீதியிலான பிரிப்பு முறை நீக்கப்பட்டு மாகாணத்திற்குள்ளான சமமான நியமனம் வழங்கப்பட வேண்டும், ஏற்கெனவே அரச உத்தியோகத்தர்களாகக் கடமை புரிவோரும் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக்திற்கு முன்பாக திங்கட்கிழமை 30.10.2017 காலை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: