மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் அழகுக் கலை மற்றும், தையல் பயிற்சி நெறிக்குரிய வளங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருந்தும் உரிய போதனாசிரியர்கள் இன்றிக் காணப்படுவதாக மேற்படி தொழிற்பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பாளர் சதாசிவம் சதாகுமார் ஞாயிற்றுக் கிழமை (29) தெரிவித்தார்.
இவ்விடையம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்….
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் கணிணி, பிளம்பர், தையல், எலக்ரிக்கல், மோட்டார் வாகனம் திருத்துதல், போன்ற பயிற்சிகளுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஐ.சி.ரி யும், எலக்ரிக்கல் மற்றும் பிளம்பர் ஆகியவற்றுக்கான பயிற்சிகள்தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தையல் மற்றும் அழகுக் கலை போன்ற பயிற்சிகளுக்கு பெறுமதிவாய்ந்த உபகரணங்களும், பயிற்சியாளர்களும், இருந்தும்கூட உரிய போதனாசிரியர் இல்லாத குறை காணப்பட்டுக் கொண்டு வருகின்றது. இவற்றுக்குரிய போதனாசிரியர்கள் வருவார்களாக இருந்தால் இப்பிரதேச இளைஞர் யுவதிகள் உரிய துறைசார்ந்த தொழில் அறிவினைப் பெற்று உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் நல்ல வருமானதத்தைத் தேடிக் கொள்ளலாம். என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment