தமிழ் மக்கள் ஆயுதத்தினை கைவிட்டுள்ளபோதிலும் அகிம்சையினை கைவிடவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய,இலங்கை அரசாங்கங்கள் அகிம்சை போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும் தன்மைன குறைவடைந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மகாத்மா காந்தி மேற்கொண்ட அகிம்சை போராட்டம் காரணமாகவே இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்தது.அந்த அகிம்சைவாதி பிறந்த நாள் அகிம்சையை பின்பற்றுவோரின் உன்னத நாளாகும்.
தந்தை செல்வா அவாகள் காந்தியின் வழியையே பின்பற்றியிருந்தார்.அகிம்சை வழியிலேயே போராட்டங்களை நடாத்தினார்.இந்த நாட்டில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைத்தது 1956ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வே மேற்கொண்ட சத்தியாக்கிரகம் மூலமே கிடைத்தது.
ஆகிம்சை போராட்டங்கள் மூலம் பல விடயங்கள் நடாத்தப்பட்டுள்ளன.ஆனால் இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் அகிம்சை போராட்டங்களுக்கு மதிப்பளிப்பது குறைவான நிலையிலேயே உள்ளது.
ஏந்த காந்தி பிறந்த நாட்டில் அகிம்சை மூலம் சுதந்திரம் பெறப்பட்டதோ அந்த நாட்டிலும் பல விதங்களில் அகிம்சை போராட்டங்கள் நடக்கின்றது.அந்த நாட்டு அரசாங்கம் அதனை பார்த்துக்கொண்டுதான் உள்ளது.
இலங்கையில் கூட காணாமல்போன உறவுகள் நூறு நாட்களையும் தாண்டி அகிம்சை ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.இந்த அரசாங்கமும் அதனைபார்த்தும் பார்க்காதது போல் இருந்துவருகின்றது.
தற்போதுள்ள இந்திய அரசாக இருக்காலம் இலங்கை அரசாக இருக்கலாம் காந்திய கொள்கைக்கு மதிப்பளிக்கவேண்டும்.அகிம்சை போராட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்கான பதில்களை வழங்கி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளமுன்வரவேண்டும்.
இன்று ஆயுதங்கள் தமிழர்களிடம் இருந்துவிலகிச்சென்றுள்ளன.ஆனாலும் அகிம்சை இருந்துகொண்டுதான் உள்ளது.அந்தவகையிலேயே சம்பந்தர் ஐயா அவர்கள் அகிம்சையினை கையில் ஏந்தி யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாத வகையில் அரசாங்கத்துடன் கூட நிதானமாக பேசிக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றார்.
இந்த காந்தி பிறந்த தினம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களுக்கும் ஒரு உன்னதமான நாள்.
0 Comments:
Post a Comment