இந்தியாவிற்கு அந்நிய நாட்டிடம் இருந்து விடுதலையை பெற்றுக்கொடுத்து அகிம்சையை போதித்த இந்தியாவின் பெரும் தலைவரான மகாத்மா காந்தியின் 148வது ஜெயந்திதினம் இன்று திங்;கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை காந்தி ஜெயந்தி தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் காந்தி புங்காவில் உள்ள காந்தி சிலையருகே இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
0 Comments:
Post a Comment