கடந்தகால யுத்தத்தினால் நலிவுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்படும்.குறிப்பாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் பிள்ளைகளுக்குரிய கல்வியைப் பெறமுடியும்.இதனால் குடும்பத்தின் தேவைகள்,இலக்குகள் தங்குதடையின்றி கிடைக்கப்பெறும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறு பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களினதும், யுவதிகளினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்ச்சி நிலைய திறப்பு விழா மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் திருமதி.சந்திரிக்கா ராஜ்மோகன் தலைமையில் புதன்கிழமை (11) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி பிரதம அதிதியாக வருகைதந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான கன்ணன், ஜெகன்,மீனா, மகேந்திரன், நிந்தியானந்தன் மற்றும் பயனாளிகளும்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.பிரதியமைச்சரின்சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ். எஸ்.அமீரலி அவர்களின் 650,000 நிதி ஒதுக்கீட்டின் மூலம் 16 யுவதிகளுகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்…. மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் தமிழ்மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதியை தெரிவு செய்யவேண்டும்.அப்போதுதான் உங்களின் பிரச்சனைகள்,தேவைகள் பிரதேச செயலங்கள் முதல் பாராளுமன்றம் வரையும் ஒலிக்கும்.அப்போதுதான் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும். எதிர்வரும் தேர்தல்களில் உங்களுக்கு சேவைசெய்யும் பலமிக்க அரசியல்வாதிகளை தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் எங்களின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும்.
கடந்த தேர்தலில் உங்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதியை நீங்கள் இழந்துள்ளீர்கள். வாழ்வது தமிழாக இருந்தாலும் வளர்வது பொருளாதாரமாக இருக்கட்டும்.பொருளாதாரத்தை தேடுவதன் மூலம் எங்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment