13 Oct 2017

மண்டூர் பாலத்திற்கான அடிக்கல் நடும்விழா நிறுத்தப்பட்டுளளதான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.

SHARE

மண்டூர் பாலத்திற்கான அடிக்கல் நடும்விழா நிறுத்தப்பட்டுளளதான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.
மண்டூர் பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரகல்ல அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற இருந்தது.

குறித்த நிகழ்வு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவித்தலை தேசிய நல்லிணக்க அமைச்சு அறிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் வினாவியபோது.

அவர் உடனடியாக தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞ்ஞானசோதியை தொடர்பு கொண்டு வினாவியபோது அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு.

நான் மண்டூர் பாலத்திற்கான அடிக்கல் நடு விழாவை நிறுத்துவதற்கான கடிதங்கள் எதனையும் அனுப்பவில்லை. தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறுகின்ற எந்த நிகழ்வினையும் அவசரப்பட்டு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும். 

அவ்வாறு மேற்கொள்வதாக இருந்தால் அனைவரையும் ஒன்றிணைத்து  உரியவிதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுப்பது பொருத்தமானது, எனவும் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்த வேலைத்திட்டங்களை அவசரப்பட்டு மேற்கொள்வததை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக மண்டூர் பாலத்தினை இடைநிறுத்துமாறு எவ்விதமான கடிதங்களும் அனுப்படவில்லை என அவர் இதன் போது தெரிவித்துள்ளார் 

SHARE

Author: verified_user

0 Comments: