மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள அதிகஸ்டப் பிரதேச பாடசாலையாகக் காணப்படும் மட்.பட்.மண்டூர் 40 ஆம் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த தரம் 8 இல் கல்வி பயிலும் பரமேஸவரன் குகேந்திரன் என்ற மாணவன் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் 14 வயதின் கீழ் குண்டுபோடுதல் நிகழ்ச்சியில் பங்குற்றி 12.99 மீற்றர் தூரம் எறிந்து, இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
பாடசாலைகளுக்கிடையிலான தேசிமட்ட விளையாட்டுப் போட்டி கொழும்பு தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.
இச்சாதனையை நிலைநாட்டிய மாணவனை மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து மலர்மாலைகள் சூட்டப்பட்டு பட்டாசுவெடிகள் முழங்க கெப் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அவரது பாடசாலைவரைச் சென்றடைந்தது.
இவ்விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி இந்த தேசிய சாதனையை நிலைநாட்டி போரதீவுப்பற்றுப் பிரதேசம், பட்டிருப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மாவட்டம், மற்றும் கிழக்கு மாகாணத்திற்கே பெருமை சேர்ந்ததைமையையிட்டு கல்விச் சமூகம், விளையாட்டு அர்வலர்கள், என அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment