பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு காரியாலயம் மற்றும் களுவாஞ்சிகுடி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மட்டக்களப்பு கிளைகளுக்கிடையிலான அணிக்கு 7 பேர் கொண்ட 4 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது லீக் முறையில் கடந்த வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் நடவடிக்கை மற்றும் வியாபார பிரதி பொது முகாமையாளர் A.H.M.M.B ஜெயசிங்கே அவர்களும் கிழக்கு மாகாண பிராந்திய பொது முகாமையாளர் ஜக்சன் விஜயசேகர மற்றும் உதவி பொது முகாமையாளர் அத்துள குமார மற்றும் வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் க.சத்தியநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
இதில் 1ம் இடத்தை தொடர்ச்சியாக 2வது தடவையாக களுவாஞ்சிகுடி கிளை பெற்றுக்கொண்டதுடன், 2ம் இடத்தை செங்கலடி கிளை பெற்றது. மேலும் இதில் தொடர் ஆட்ட நாயகனாக சி.லோக்காந் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறப்பாட்டகாரராக தே.தினேஸ்குமார், சிறந்த பந்து வீச்சாளராக R.L. கவிதர்சன்போல் ஆகியோர் தெரிவு செய் ய பட்டனர்
0 Comments:
Post a Comment