மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் வெளியாகியுள்ள புலமைப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 330பேர் சித்தியடைந்துள்ளதாக மண்முனை வடக்கு கோட்டப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.
இப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நோக்கும் கடந்த வருடத்தின் பெறுபேற்றைவிட இம்முறை 40 மாணவர்களின் பெறுபேறு அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டங்களின் பெறுபேற்றை உற்று நோக்கும்போது அதிகூடிய பெறுபேறுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்முனை வடக்கு கோட்டத்தில்தான் புலமைப்பரீட்சை பெறுபேற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு கோட்டத்தில் 288 மாணவர்களும்,மண்முனை பற்று கோட்டத்த்தில் 35 மாணவர்களும்,ஏறாவூர் கோட்டத்தில் 7 மாணவர்களுமாக மொத்தமாக 330 மாணவர்கள் மட்டக்களப்பு வலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.
மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் உள்ள வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையில் 56 மாணவர்களும்,கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 46 மாணவர்களும்,
புனித மிக்கல் கல்லூரியில் 40 மாணவர்களும்,புனித சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 38 மாணவர்களும்,மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 27 மாணவர்களும்,சிவானந்தா தேசிய பாடசாலையில் 21 மாணவர்களும்,கல்லடி விவேகானந்தா மகளீர் பாடசாலையில் 13 மாணவர்களும்,அருணோதயா வித்தியாலயத்தில் 9 மாணவர்களும்,ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் 6 மாணவர்களுடன் ஏனைய பாடசாலைகளின் மாணவர்கள் அடங்கலாக மண்முனை வடக்கு கோட்டத்தில் 288 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.
இப்பரீட்சையில் வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாவது இடத்திற்கும்,சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காவது இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளார்கள்.
இப்பெறுபேற்று வளர்ச்சிக்கு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் முறையான நெறிப்படுத்தல்,திட்டமிடல், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் அவர்களின் திட்டமிடல்,செயற்திட்டம் ஒழுங்கமைப்பு,போன்றன மண்முனை வடக்கு கோட்டப் பெறுபேறு அதிகரித்துள்ளமையாகும் என அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,கல்விச்சமூகம் தெரிவிக்கின்றார்கள்.
இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும்,புலமைப்பரீட்சையில் ஒவ்வொரு பிள்ளைகளையும் சித்தியடைய வேண்டும் எனும் நோக்கில் நெறிப்படுத்தி வழிகாட்டிய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கும்,அதற்கு பக்கபலமாக நாட்டுக்கு நல்ல பிரஜையாக்க வேண்டும் எண்ணம் கொண்ட பெற்றோர்களுக்கும்,அதிபர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment