ஆசிரிய சேவையில் தனது 41 வருட பணியை மனநிறைவுடன் பூர்த்தி செய்து கொள்வதாக காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியை ஷாமீலா அஷ்ரப் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோட்டமுனைப் பிரதேசத்தில் பிறந்த இவர் தனது 41 வருட கால கல்விப் பணியில் விஞ்ஞான, கணித ஆசிரியையாகவும் உப அதிபராகவும் சேவையாற்றியுள்ளார்.
உறுகாமம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 1977.05.12இல் தனது முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்ட இவர் எதிர்வரும் (2018) ஆண்டு மார்ச் மாதம் தனது 41 வருட சேவையை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளார்.
அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்ட இவர் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி, மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு கள்ளியங்காடு ஸாஹிரா வித்தியாலயம் பதுளை-மஹியங்கனை பங்கரகம்மன முஸ்லிம் வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி, மற்றும் காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்திலும் கடமையாற்றியுள்ளார்.
தற்போது காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் பணியாற்றிவருகின்றார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் மட்டக்களப்பு கோட்டமுனைக் கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் தரக் கல்வியை முடித்திருந்த வேளையில் அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் பதியூதீன் முஹம்மது அவர்களால் பயிற்றப்படாத விஞ்ஞான கணித ஆசிரியராக நியமனம் பெற்றார்.
0 Comments:
Post a Comment