2 Oct 2017

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்- (வீடியோ)

SHARE
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பெற்போர்கள் திங்கட் கிழமை (02) இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்துவரும் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயம் திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளராக திங்கட் கிழமையிலிருந்து (02) இடமாற்றப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண கல்வி அமைச்சு அறிவித்துளது.

இந்நிலையில் இந்த இடமாற்றத்ரைத இரத்துச் செய்யக்கோரி பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட இரு வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுனருக்கு ஆனுப்பிவைக்கும் வகையில் பிரதேச செயலாளர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்களால் மகஜர்களும் சமர்ப்பிக்கட்பட்டன.

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,

அரசியல் பழிவாங்கல் இடமாற்றத்தை இரத்துச்செய்,  வலயத்தின் கல்வி வயர்ச்சியைத் தடுக்காதே, வேண்டாம் வேண்டாம் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் வேண்டாம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தைக் கண்டிக்கிறோம், பெண்தலைமைத்துவத்தைப் பாதுகாப்போம், நீதியான நிருவாகி திருமதி புள்ளநாயகம் அம்மணியே வேண்டும், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்கு அருகில் நின்றபடி கோசமிட்டனர்.

இந்நிலையில் வலயக்கல்வி அதுவலகத்தினுள் இருந்து வந்த கோட்டக்கல்வி அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 3 பேரடங்கிய குழுவினர் ஆர்ப்பாட்டக்கார்களையும். ஊடகவியராளர்களையும் கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தார். இதனை அவதானித்த ஆர்ப்பட்டக்காரர்கள் எங்களை நீங்கள் ஏன் புகைப்படம் எடுக்கின்றீர்கள், எனக்கேட்கவும் அவ்விடத்தில், சிறிது குழப்பநிலை ஏற்பட்டது. பின்னர் பொலிசார் தலையீடு செய்து கல்வி அதிகாரிகளை அவர்களது காரியாலயத்திற்குச் செல்லுமாறும், ஆர்ப்பாட்டக்கார்களையும் அமைதிப்படுத்தினர்.

பின்னர் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குச் சென்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.த.சத்தியகௌரியிடம் கிழக்கு மாகாண ஆளுனனுக்கு அனுப்பிவைக்கும் முகமாக மகஜர் ஒன்றும் சமர்பிக்கப்பட்டன.

இந்நிலையில் மேற்படி வலயக் கல்விப் பிணிப்பாளரின் இடமாற்றத்தைக் கண்டித்தும் அதனை இரத்துச் செய்யக்கோரியும் வெல்லாவெளியிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று திங்கட் கிழமை (02) இடம்பெற்றுள்ளது. அப்பகுதி பெற்றோர்கள் வெல்லாவெளிசந்தியிலிருந்து பேரணியாகச் சென்று கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைக்கும் முகமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்திடம், மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 





























https://youtu.be/t6f_f46sf-Q?t=2
SHARE

Author: verified_user

0 Comments: