சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியல் விடிவு பற்றிய எதவித அறிவும் இல்லாது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் பாமர மக்களிடத்தில் போய் நின்று ஆர்ப்பரிப்பது வெட்கக் கேடாக இருக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கான மூன்று மாடிக் கட்டிடத்தைத் வியாழக்கிழமை 14.09.2017 திறந்து வைத்தபின் அவர் உரையாற்றினார்.
அங்கு சமகால அரசியல் நடப்புக்கள் பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சின்னத்தனமான அரசியல்வாதிகள் சிலர் மக்களிடத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்கள்.
வாய்க்கு வந்ததையெல்லாம் உணர்ச்சி வசப்படும்படி பேசி மக்களை உசுப்பேற்றி விடுகிறார்கள். அதன் விளைவுகளைக் கொண்டு எதிர்கால தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது அவர்களது நப்பாசை.
இத்தகைய குறைமதி அறிவு கொண்டவர்கள் சிறுபான்மையினருக்கான அரசியல் விடிவு என்ன, அதனை அடைந்து கொள்வதற்கான வியூகங்களை எப்படி வகுக்க வேண்டும், மக்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவுகளே இல்லாமல் கொக்கரிப்பதால் நாமும் சிறுபான்மையினம் என்ற வகையில் வெட்கப்பட வேண்டியுள்ளது.
20வது அரசியல் திருத்தம் என்றாலே என்னவென்று தெரியாமல் மக்களிடம் பேசித் திரியும் குறையறிவு அரசியல்வாதிகளைப் பற்றி வெட்கக் கெடாக உள்ளது.
இது பற்றி நாம் கணக்கெடுப்பதில்லை என்றாலும் மக்களுக்கு சிறந்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம்பற்றி வலியுறுத்த வேண்டியுள்ளது.
யாரோ இருட்டில் வெட்டிப் போட்ட படுகுழியில் இவர்கள் பகலில் வெட்ட வெளிச்சத்தில் போய் விழுகின்றார்கள்.” என்றார்.
0 Comments:
Post a Comment