14 Sept 2017

கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா

SHARE
கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா செவ்வாய்க்கிழமை( 12) நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர்பூட்டு குழுவின்  ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்களினால் பூமாதேவிக்கான பூசைகள் மேற்கொள்ளப்பட்டன.

பூசைகளை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஏர்பிடித்து வயலினை உழுது ஆரம்பித்து வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி விவசாயத்தினை மேற்கொள்ளுகின்ற பகுதியாகும். இதனால் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டத்தினைத் தொடர்ந்து, ஏரோட்ட நிகழ்வு நடைபெற்று வருகின்றது. ஏரோட்ட நிகழ்வினை தொடர்ந்து விவசாயிகள் தமது வயல்களை உழுதுகின்ற பாரம்பரிய நிகழ்வும் இப்பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.
இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், விவசாயிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: