மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இரண்டு விபத்துகளில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லடி சாந்தி திரையரங்குக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்யொன்றை கார் ஒன்று மோதியதன் காரணமாக முச்சக்கர வண்டி கடும் சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வியாழக் கிழமை இரவு கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆரையம்பதி சிவன் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் இளைஞர்கள் ஒன்றுதிரண்ட நிலையில் அங்கு பதற்ற நிலையேற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் நின்றவர்கள் பொலிஸாரினால் துரத்தப்பட்டனர்.
இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment