காணாமல்போனோர் விடயத்தில் ஜனாதிபதியின் கரிசனை தமக்குத் திருப்தியளிப்பதாக அமையாததால் ஏமாற்றத்துடன் திரும்பினோம் என புதன்கிழமை ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் செயற்பாட்டாளர் எஸ். அரியமலர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை மட்டக்களப்பில் வைத்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் காணாமல்போனோர் பற்றி எவ்வளவோ எதிர்பார்ப்புக்களுடன் ஜனாதிபதியிடமிருந்து நம்பிக்கை தரும் பதிலை எதிர்பார்த்தோம்.
ஆனால், எங்களுக்கு ஜனாதிபதியின் திருப்தியளிக்காத பதிலால் ஏமாற்றமே காத்திருந்தது.
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் ஆட்கள் காணாமல்போதல் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி கூறினார். காணாமல்போனவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமாக இருந்தால் அதனையிட்டு விசாரித்து விடுவிக்க தன்னாலான சகல உதவிகளையும் செய்யத் தயார் என்றும் ஜனாதிபதி சொன்னார்.
படையினரிடம் ஆட்களை ஒப்படைத்தமைக்கான ஆதாரங்களை எந்தப் படை அதிகாரியிடம் ஒப்படைத்தது என்பது போன்ற விவரங்கள் ஆதாhரமாக ஆவணம் சமர்ப்பிக்கப்படுமாக இருந்தால் அதனையும் விசாரணை செய்யலாம் என்றும் கூறினார்.
ஆனால், ஜனாதிபதியின் இந்தப் பதில்களால் நாங்கள் நிலைகுலைந்து போய் ஏமாற்றத்துடன் திரும்பினோம்” என்றார்.
காணாமல்போனோரின் உறவினர் பிரதிநிதிகள் மடட்டக்களப்பு மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் போகச் செய்தல், மனித உரிமை மீறல்கள். மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி ஜனாதிபதின் கவனத்திற்குக் கொண்டு வந்து நீதி பெற்றுக் கொள்வதற்காக புதன்கிழமை 06.09.2017 ஜனாதிதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 6000 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வலிந்து காணாமலாக்கப்பட்டிருப்பதாக செயற்பாட்டாளர் அரியமலர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment