6 Sept 2017

சின்னக் கத்திர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

SHARE
கிழக்கில் சின்னக் கத்திர்காமம் எனப்போற்றப்படும்  
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் புதன்கிழமை (06) நடைபெற்றது.

சுவாமி புஸ்ப்பக விமானத்தில் உள்வீதி, வெளி வீதி வலம் வந்து மண்டூர் கிராமத்தின் அருகே மட்டக்களப்பு வாவி சங்கமிக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ள சபா மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கு பூஜைகள் இடம்பெற்ற பின்னர் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

தீர்த்தோற்சவம் இடம்பெற்ற பின்னர் சுவாமி ஆலயத்தின் வெளிவீதி வளியாக தெய்வானையம்மன் ஆலயத்தின் எதிரே வந்துகொண்டிருக்கும் போது அவ்விடத்தில் சுவாமியை வரவேற்று ஆராத்தி எடுத்துக் கொண்டிருக்கும் சிறுமிகள் மயக்கமுற்றுவிழ அவர்களைத் தூக்கிக் கொணர்ந்து வள்ளியம்மன் ஆலயத்தின் பின்னால் வைத்த சற்று நேரத்தில் மயக்கம் தெழிந்து எழுந்த அதியம் இவ்வருடமும் இடம்பெற்று பக்கதர்களை பரவசத்தில் ஆழத்தியிருந்தது. இதன்போது லெட்சக்கணக்கான பக்தர்கள் கலந்த கொண்டு முருபகப்பெருமானின் அருளாசிபெற்றமை சிறப்பம்சமாகும்.





























SHARE

Author: verified_user

0 Comments: