10 Sept 2017

சிபான்மை; சமூகத்தினரின் தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பெரும்பான்மையினர் ஏற்று அங்கீகரிக்கின்றபோதுதான் சிறுபான்மையினர் தங்களுக்கே உரித்தான அபிலாஷைகளை வெற்ற கொள்ள முடியும். முகாமைத்துவ ஆலோசகர் ஜே.பெனடிக்ற்

SHARE
சிபான்மை சமூகத்தினரின் தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பெரும்பான்மையினர் ஏற்று அங்கீகரிக்கின்ற போதுதான் சிறுபான்மையினர் தங்களுக்கே உரித்தான அபிலாஷைகளை வெற்றி கொள்ள முடியும் என முகாமைத்துவ ஆலோசகர் ஜே. பெனடிக்ற் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பன்மைத்துவத்தை உள்வாங்குதல், தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தல் எனும் தொனிப்பொருளிலான முழுநாள் கலந்துரையாடல் மட்டக்களப்பு நகரில் வியாழக்கிழமை 07.09.2017 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள சமாதான சௌஜன்ய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்……  இலங்கையில் சிறுபான்மை என்பதில் பல்வேறு புரிந்து கொள்ளாத நிலைமைகள் உள்ளன.

வடக்கு கிழக்கிலே தமிழ்பேசும் சமூகமே பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு சிங்களவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

ஒட்டுமொத்த நாட்டையும் நோக்கினால் தமிழ் பேசும் சிறுபான்மையினராக உள்ளனர்.

சிறுபான்மையினர் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தனித்துவம் பாதுகாக்கப்படாதததால்தான் பல்வேறு சிக்கல்கள், மனவடுக்கள் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

எமது அரசியல் யாப்பிலே இருக்கின்ற ஒரு சில விடயங்கள் சிறுபான்மை மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதன் காரணத்தினால் என்றைக்குமே தமிழ் பேசும் சமூகங்களாகிய நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர்தான்.

சிறுபான்மை சமூகத்தினரின் தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பெரும்பான்மையினர் ஏற்று அங்கீகரிக்கின்றபோதுதான் சிறுபான்மையினர் தங்களுக்கே உரித்தான அபிலாஷைகளை வெற்றி கொள்ள முடியும்.

ஆகையினால் பெரும்பான்மையினருக்கான மனமாற்றத்தை எவ்வளவு தூரம் நாம் கொண்டு வர முடியும் என்பதில் முடிந்தளவு முயற்சிக்க வேண்டும்.
இந்த நாட்டில் பெரும்பான்மையினருக்குள்ள அனைத்துத் தேவைப்பாடுகளும் சிறுபான்மையினருக்கும் உள்ளன என்கின்ற இந்தப் புரிதல் பரஸ்பரம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டாக வேண்டும்.

ஆகவே, இந்த நாட்டில் பல்லின சமூகம் பரஸ்பரம் அடுத்தவருக்காக குரல் கொடுக்கின்ற நிலைமை வரும்பொழுது சகவாழ்வும் சௌஜன்யமும் சமாதானமும் ஏற்படும்.

தனித்துவங்களை ஏற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக தற்போதய யுத்தமில்லாத சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”என்றார்.

நாடுபூராகவும் தற்போது இடம்பெற்றுவரும் “இலங்கையில் அனைத்து சமயங்கள், மற்றும் அனைத்து இனங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்” Training on pluralism, inclusivity, andevolving a pluralistic national identity through community engagement. For District Inter- Religious Committee திட்டத்தை பிரிட்டிஷ் கவுன்ஸில், ஆசிய மன்றம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை ஆகிய நிறுவனங்கள் அமுலாக்கம் செய்கின்றன.







SHARE

Author: verified_user

0 Comments: