(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
உலகில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலாகும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் தெரிவித்தார்.
உலகில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலாகும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் தெரிவித்தார்.
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு "தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம்" பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு (09.08.2017) பணிமனையின் கூட்ட மண்டபத்தில் பணிப்பாளர் டாக்டர் .ஏ.எல்.அலாவுத்தீன் தலைமையில் நடைபெற்றது. இங்கு விளக்கமளிக்கும் போதே வைத்திய அதிகாரி இவ்வாறு தெரிவித்தார் மேலும் விளக்கமளிக்கையில்;
தாய்ப்பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது. அஸ்மா நோயை குறைக்கிறது. உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள், சுவாசத் தொற்றுநோய், சமீபாட்டு கோளாறுகள், பல்வரிசைக் கோளாறு என பல நோய்களையும் தடுக்கிறது. இவை தவிர தாய்கும் நோய்களிலிருந்து் பாதுகாப்பு கிடைக்கிறது. குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாா்களுக்கு மார்பக புற்று நோய், சூலக புற்று நோய், உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் இலகுவில் வருவதில்லை.
தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்த எமது நாட்டின் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றதன. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மட்டுமே தாய்க்கும்- பிள்ளைக்கும் இடையிலான அன்பு, இணைப்பு அதிகரிக்கும். தாயின் மடியே ஒரு பிள்ளையின் ஆரம்ப முன்பள்ளியாகும். எனவே தாய்ப்பாலை தாய்மார் குழந்தைகளுக்கு நேரமொதிக்கி, சுகமான முறையில் ஊட்ட வேண்டும். உலகில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலாகும். என்றாா்.
இதில் சுகாதார சேவைகள் அலுவலக வைத்தியா்கள் உட்பட அதிகமான அரச சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments:
Post a Comment