26 Aug 2017

கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து நெடுஞ்சாலை அமைக்குமாறும் சபையில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

SHARE
(ஆர்.ஹஸன்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சேதமடைந்த வீதிகளை புனரமைக்க நெடுஞ்சாலை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அது போன்று கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து கல்முனை வரை அல்லது பொத்துவில் வரை நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை மற்றும் விளையாட்டு சட்டத்தின் கீழ் ஓழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோசமான நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பரிபூரணப்படுத்தப்படவில்லை

யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பின்தங்கியுள்ளோம். நெடுஞ்சாலைகள் அமைப்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளத

இவ்வாறு வீதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் போது மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாள்களை அதிகம் கொண்டுவர முடியும்.  

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் மோசமான நிலையில் பின்தங்கியுள்ளது. முதலீட்டாளர்களை அங்கு அழைத்து செல்ல முன்னர் நெடுஞ்சாலைகள் இருக்கின்றனவா? என்று கேட்கின்றனர்

பெருந்தெருக்கள் இல்லாமையால் முதலீட்டாளர்களை கொண்டு செல்ல முடியாதுள்ளது. நெடுஞ்சாலைகளை கல்முனைவரை அல்லது பொத்துவில் வரை நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். ஹபரணை தொடக்கம் மட்டக்களப்பு வரையில் உள்ள பிரதான வீதி நான்கு தடங்களைக் கொண்ட வீதியாக தரமுயர்த்தப்பட வேண்டும்.


இதனூடாக அம்பாறை மாவட்டத்தில் தொழில்துறைகளை அதிகரிக்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு மைதானங்களை புனரமைக்க வேண்டும்” - என்றார்
SHARE

Author: verified_user

0 Comments: