போரதீவுப்பற்று பிரதேசத்தின் பெரும்பாலான மக்களின் பல தேவைகளை நிறைவேற்றி அவர்களின் மனதிலும், வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது உலக தரிசன நிறுவனமாகும்.இதனால் இப்பிரதேசத்தின் பெரும்பாலான மக்கள் மாற்றமடைந்து சவால்மிக்க உலகிற்கு வாழ்வதற்க்குரிய மனிதர்களாக திகழ்ந்துள்ளார்கள் என போரதீவுப்பற்று சிவில்
அமைப்பின் தலைவரும்,"போரதீவுப்பற்றின் பொற்காலம்" விடுகைவிழாவின் விழாக்குழுத்தலைவருமான வடிவேல் -சக்திவேல் தெரிவித்தார்.
"போரதீவுப்பற்றின் பொற்காலம்" எனும் உலக தரிசன நிறுவனத்தின் 24 வருடகால செயற்றிட்ட நிறைவு
விழா புதன்கிழமை (09) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உலக தரிசன நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் தனன் சேனாதிராசா, வெல்லாவெளி பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம்,போரதீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், உலக தரிசன நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றி பேசுகையிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
போரதீவுப்பற்று பிரதேசம் கடந்த காலங்களில் மிகவும் கஸ்டமான, வறுமையுள்ள,போக்குவரத்து வசதியற்ற,எந்தவித அடிப்படைத்தேவைகளும் நிறைவேற்றப்படாத பிரதேசமாக திகழ்ந்தது. இப்பிரதேசத்தின் மக்கள் அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கப்பெறாத மக்களாகவும்,யுத்தத்தின் வலிகளை உணர்ந்த மக்களாகவும் ,தனது மனித உழைப்புடன் செய்யப்பட்ட மக்களாக திகழ்ந்தார்கள். இதுமட்டு மல்லாமல் யுத்த சூழலுக்குள் வாழ்ந்து வந்தார்கள்.
தினமும் தமது உணவுக்காகவும்,கல்விக்காகவும் பல தியாகங்களுக்கு மத்தியில் போராடவேண்டிய நிலையில் காணப்பட்டார்கள். இதனை கருத்திற்கொண்டு 1993 ஆம் ஆண்டு முதல் போரதீவுப்பற்று பிரதேசத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நோக்கில் உலக தரிசன நிறுவனம் காலடி எடுத்துவைத்தது. அன்றுமுதல் 2017.08.09 ஆம் திகதிவரை வரையும் இப்பிரதேசத்திலுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளில்,மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பதில் அயராது உழைத்தது.
இம்மக்களின் கல்வி,சுகாதாரம்,வாழ்வாதாரம், விளையாட்டு,சிறுவர்களின் உடல்திறன் அபிவிருத்தி,குடிநீர், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு தேவைகள்,போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தது. பிரதேசத்தின் வன்னிநகர், வீரஞ்சேனை, மாவேற்குடா,ஆகிய மூன்று கிராமங்களில் சிறுவர்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் செயற்படத் தொடங்கிய தன்னார்வ தொண்டர் நிறுவனம் மெல்ல மெல்ல தனது சேவையை 24 கிராம சேவையாளர் பிரிவுகளில்,விஸ்தரித்தது.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் வலிகளும்
வேதனைகளும், அது மற்றவர்களுக்கும் எற்படும், அதே வலிகளும் வேதனைகளும் இறைவனுக்கும்
ஏற்படும் எனும் கருப்பொருளை இந்த உலக தரினச நிறுவனம் மக்கள் மத்தியில் உணர்த்திச் சென்றிருக்கின்றது.
தனது கள உத்தியோகஸ்தர்களைக் கொண்டு பொதுமக்ளோடு நட்புறவாகி, தேவைகளை இணங்கண்டு சேவைகளைச் செய்தது. மேலும் யுத்தத்தின் வலிகளை உணர்ந்த மக்களை தனது நிறுவனத்தின் உதவிக்கரத்தைக் நீட்டி அவர்களை ஆற்றுப்படுத்தி கோடிக்கணக்கான நிதியின்மூலம் சேவையை செய்து,சமூகத்தில் நற்பிரஜை ஆக்கியது. இதனை இப்பிரதேச மக்கள் மறக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. இந்நிறுவனத்திற்கு பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனக்குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment