கிழக்கு மாகாணசபையின் ஆட்சி நீடித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற அமைச்சரவை வாரியத்தை மாற்றுவதற்கு யோசிக்க வேண்டும். இரண்டரை வருடகாலம் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கின்றது. முஸ்லிம் காதங்கிரசைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார். இன்னும் 2 வருடங்கள் இந்த ஆட்சி நீடித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்த சூழலினால் பாதிக்கப்பட்டு; அபிவிருத்தியை எட்டாத நிலையில் தற்போத எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
பின்தங்கியதும், தனித்துவிடப்பட்டதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களினதும் முயற்சியினால், 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கச்சக்கொடி சுவாமிமலை எனும் கிராமத்தில் நிருமாணிக்கப்பட்ட பாலம் மற்றும் கொங்கிறீட் வீதி ஆகியவற்றை திறந்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
எதிர்வருகின்ற செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாதணசபையின் அட்சிக்காலம் முடிவுறவுள்ளது. இந்நிலையில் மாகாணசபை கலைக்கப்படுமா? அல்லது இதன் ஆட்சி நீடிக்கப்படுமா என்ற புரழி ஒன்று இருந்து கொண்டிருக்கின்றது. இலங்கையில் மாகாண சபை தேர்தல் முறையில் மாற்றம் கொண்டவரப்பட வேண்டும் என மந்திரிசபையில் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றது. மாகாணசபையின் ஆட்சியை நீடிப்பதாக கடந்த வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதமர் கூறிச் சென்றிருக்கின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 பேர் கிழக்கு மாகாணசபையில் இருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்விடையம் தொடர்பில் கூடிப் பேசவேண்டியிருக்கின்றோம். இருந்த போதிலும் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஆளுனரின் ஆட்சிக்குள் வந்தால் எமக்கு ஒரு துயரம் காத்திருக்கின்றது. மாகாணசபை ஆளுனரின் ஆட்சிக்குக் கீழ் வந்தால்! … ஆளுனராக இருப்பவர் ஒரு சிங்கள இனத்தைச சேர்ந்தவர் அதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். கிழக்கு மாகாணத்தில் 23 வீதமுள்ள சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஆளுனர் அவரது கட்சியை வளப்படுத்தும் செயற்பாட்டில்தான் ஈடுபடுவார்.
இந்நிலையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டால் சபையின் தவிசாளரின் பதவி வறிதாக மாட்டாது. தவிசாளர் பதவியிலும், அதிகாரத்திலும் இருப்பார். இதேவேளை கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும் ஒரு சிங்கள இனத்தை சேர்ந்தவர் அதுவும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். எனவே மாகாணசபை கலைக்கப்பட்டு ஆளுனர் ஆசிக்குக் கீழ் மாகாணம் வருமாக இருந்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியுமாக 2 பெரும்பாண்மைக் கட்சிகளுடன் 2 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆட்சி மாறும்.
என்னைப் பெறுத்தவரையில் மக்கள் கொடுத்த 5 வருட ஆணையின் பின்னர் தேர்தல் நடைபெற வேண்டும். இந்த உரிமை மக்களுக்கு இருக்கின்றது. எனவே தேர்தல் நடந்தே ஆகவேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி நீடித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற அமைச்சரவை வாரியத்தை மாற்றுவதற்கு யோசிக்க வேண்டும். இரண்டரை வருடகாலம் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கின்றது. முஸ்லிம் காதங்கிரசைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார். இன்னும் 2 வருடங்கள் இந்த ஆட்சி நீடித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்த சூழலினால் பாதிக்கப்பட்டு; அபிவிருத்தியை எட்டாத நிலையில் தற்போத எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் கைகளிலே முதலமைச்சர் பதவி இருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்திற்கு வரும். இவ்வாறெளில்தான் அதிகளவு அபிவிருத்திகளை மேற்கொண்டு செல்லலாம் எனக் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment