கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடனும்
மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) உதவியுடனும், கல்முனை கோட்டக்கல்வி பணிமனையின் வழிகாட்டலின் கீழ், கல்முனை (முஸ்லீம்) கோட்ட கல்வி பிரிவிலுள்ள பாடசாலைகளில் மாதிரி புலமைப் பரிசில் பரீடசை அண்மையில்(30) நடைபெற்றது.
மருதமுனை, கல்முனைக்குடி, நட்பிட்டிமுனை ,இஸ்லாமாபாத், ஆகிய பிரதேசங்களில், தரம் ஐந்தில் கல்வி பயிலும் 15 பாடசாலைகளை சேர்ந்த சுமார் 1030 மாணவர்கள் இம் மாதிரி புலமைப் பரிசில் பரீட்ச்சைக்கு சமூகமளித்ததுடன்
பரீட்ச்சை நிலையங்கள் மற்றும் மேற்பார்வை கடமைக்குரிய ஆசிரிய ஒழுங்குகள் என்பன கல்முனை கோட்ட பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தலைமையில் மேட்கொள்ளப்பட்டிருந்தது.
இப் பரீட்ச்சை, கல்முனை வலயத்திலுள்ள
அல்-மனார் மத்திய கல்லூரி ,ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்-அக்ஷா மகா வித்தியாலயம்,அல்-பஹ்றியா மகா வித்தியாலயம்,
அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்,புலவர்மணி ஷரிபுதீன் வித்தியாலயம்,அல்-ஹம்றா வித்தியாலயம்,அல்-அஸ்ஹரவித்தியாலயம்,லாபீர் வித்தியாலயம்,அல்-மதீனா வித்தியாலயம்,அல்-மினன் வித்தியாலயம்,அஸ்-ஷூஹறா வித்தியாலயம்,இஸ்லாமாபாத் வித்தியாலயம் ,றோயல் வித்தியாலயம்,அக்பர் வித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெற்றது.
”செசெப்” அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம் , செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத் ஆகியோர் கல்முனை வலயகல்விப்பணிப்பாளர் ,கோட்ட பணிப்பாளர்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்தனர்
பரீடசைக்கான நிதி அனுசரணையினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஏ.றசாக் (ஜவாத்) அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிட தக்கதாகும்.
0 Comments:
Post a Comment