1 Aug 2017

எங்களுடைய மாகாணத்தை போதைப் பொருளலற்ற, குற்றமற்ற மாகாணமாக பிரகடணப்படுத்தி முன்னுதாரணமான மாகாணமாக செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபர் வழங்கவேண்டும் - முதலமைச்சர்

SHARE
எங்களுடைய மாகாணத்தை போதைப் பொருளலற்ற, குற்றமற்ற மாகாணமாக பிரகடணப்படுத்தி இலங்கைக்கு முன்னுதாரணமான மாகாணமாக செயற்படுவதற்கு தங்களது ஒத்துழைப்பை பொலிஸ்மா அதிபர் வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்தார்.

    
வெல்லாவெளி பொலிஸ் நிலைய புதிய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை (29) நடைபெற்றது. இந் நிழ்வில் பிரதம அதிதியாக பொலிஸ்மா அதிபார் பூஜித் ஜெயசுந்தர அவர்கள் கலந்து கொணடார் இந் நிகழ்வில் சிற்ப்பதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்….
     
சிறுபான்மை மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு எமது மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று மொழிபிரச்சினை காரணமாக திண்டாடிய நிலைமை காணப்பட்டிருந்தது. அதனை நிவர்த்தி செய்வதற்காக இன்று தமிழ் மொழிபேசுகின்றவர்களை பொலசில் சேவையில் இணைத்து கொள்தற்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நாங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    
எங்களுடைய தமிழ் பேசுகின்ற இளைஞர்கள் பொலிஸ் சேவையில் உள்வாங்கப்படுகின்ற தேவை இருக்கின்ற அதே நேரத்திலே எங்களுடைய இளைஞர்களும் அதில் தைரியமாக இணைந்து கொள்ள வேண்டும். காரணம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக கட்டாயம் நீங்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

எங்களுடைய கிழக்கு மாகாணத்தினை போதைப்பொருள் அற்றமாகாணமாக பிரகடணபடுத்தப்பட வேண்டும் என்ற அவ எங்களுக்கு இருக்கின்றது. இது மமாத்திரமின்றி எந்தவித குற்றமும் அற்ற மாகாணமாக இது பிரகடணப்படுத்தப்பட வேண்டும்.இதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு இருக்கின்றது என் நான் எதிர்பார்க்கின்றேன் இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பையும் சேர்ந்து இவ்விரண்டு விடயங்களையும் இல்லாதொழித்து இந்த நாட்டில் முன்னுதாரணமாக முன்னிறந்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது இதுவே எமது வேண்டுகோளாகும்.

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற இந்த மாகாணத்திலே நாங்கள் இந்ந நல்லாட்சியை கொண்டு வந்திருக்கின்றோம். நால்லாட்சியை நடாத்திக் கொண்டிருக்கின்ற வேளையிலே நல்லிணக்கம் உள்ள மாகாணமாக செயற்படுத்தி இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக செயற்பட்டு காட்ட வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: