தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களம் அல்ல இலங்கை பொலிசாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது தகுதிவாய்ந்த திறமைசாலிகளுக்கு தகுந்த இடங்கள் வழங்கப்படுகின்றது. என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
சனிக்கிழமை (29) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலைய புதிய கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
இன்று நாங்கள் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை நாங்கள் திறந்துவைக்வில்லை ஏற்கனவே இருந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றினையே நாங்கள் திறந்துவைத்திருந்தோம் இதற்கா 14 கிராமவாசிகள் தங்களது வீடுகளை அற்பணித்திருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னும் இரண்டு நாட்களில் அவர்களின் வீடுகள் அவர்களிடம் கையளிக்கப்படும் என நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொதுமக்களின் தேவைகருதி பொலிஸ் நிலையங்களை நாங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளோம். அந்தவகையில் 485 பொலிஸ்நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன மொத்தமாக 600 பொலிஸ் நிலையங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன. போலிஸ் நிலையங்களை திறந்துவைப்பது மாத்திரமின்றி அதற்கு தேவையான உத்தியோகத்தர்களை நாங்கள் சேர்த்துக் கொள்ளவும் இருக்கின்றோம். அதனால் இப்பிரதேச மாணவர்களுக்கும் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றேன். நீங்கள் அனைவரும் பொலிசில் இணைந்து சேவையாற்றலாம் உங்களுடைய கல்வி தகைமைகளுக்கு ஏற்ப அனைத்து தரத்திலும் பொலிசார் இணைத்துக்கொள்ளபடவுள்ளனர்.
இது தற்பொழுது இலங்கை பொலிஸ் திணைக்களம் அல்ல இலங்கை பொலிசாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் முன்னர் போன்று அல்ல இதற்கான அமைச்சர் செயலாளர் அதற்கான உத்தியோகததர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன். தற்பொழுது தகுதிவாய்ந்த திறமைசாலிகளுக்கு தகுந்த இடங்கள் வழங்கப்படுகின்றது. இலங்கை பொலிசார் இனம்,மதம்,கலாசாரம் ஆகியவற்றிக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் இலங்கை பொலிசில் கடைபுரியும் அனைத்து உத்தியோகத்தரும் மக்களுடைய கருத்துக்களுக்கு செவிகாய்க்கின்றனர்.
தற்பொழுது இலங்கை பொலிசார் மக்களுடைய அனைத்து சேவைகளிலும் கைகோர்த்துள்ளனர். அதாவது இயற்கை அனர்த்தம், சுகாதார செயற்பாடுகள் கல்வி செயற்பாடுகள் அனைத்திலும் உங்களுடன் கைகோர்த்து செயற்படுகின்றனர.; உதாரணமாக சொல்லப்போனால் பிறப்பத்தாட்சி பத்திரம் பெறுவதில் இருந்து இறப்பு அத்தாட்சி பத்திரம் பெறுவது வரை பொலிசாரின் நடமாடும் சேவை மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நான் ஏற்கனவே இந்த பிரதேசத்தில் கடமைபுரிந்த ஒருவன். எனக்கு இந்த பிரதேசத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகவும் அமைதியானவர்கள். அவர்கள் என்னிடம் கோருவது வேறொன்றும் இல்லை அவர்கள் நிம்மிதாக அவரகளின் தொழிலினை மேற்கொண்டு எந்தவித பிரச்சினைகளுமின்றி நிம்மதியான சூழலில் நிம்மதியாக வாழவேண்டும் என்றே என்னிடம் கோருகின்றனர்.
இதனைக்கருத்திற் கொண்டு பொலிஸ் நடமாடும் சேவை கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அது ஒருமாத காலத்திற்கு இந்த நடமாடும்சேவை நடைபெற்றது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப பாத்து நாட்கள் கூடுதலாக மொத்தமாக 40 நாட்கள் நடாத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையின் மூலம் 43 கோடிக்கும் கூடுதலான வேலைத்திட்டங்கள் இந்த நடமாடும் சேவைமூலமாக மக்கள் பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாக தேவைப்படுகின்றது. உங்களுடைய ஒத்துழைப்பின்றி நாங்கள் எந்தவித சேவையையும் செய்யமுடியாது ஆகவேதான் உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது. இவ்வாறான வேலைதிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பை நான் வேண்டி நிற்கின்றேன் என்றார்.
0 Comments:
Post a Comment