1 Aug 2017

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்ட்டிப்பு.

SHARE
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 அரசியல் போராளிகள் உட்பட தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட
மக்களை நினைவுகூறும் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.










கறுப்பு ஜுலையை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் வியாழக்கிழழமை (27) மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், டெலோ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இதில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,இரா.துரைரெட்னம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநேகராதலிங்கம், கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கறுப்பு ஜுலை கலவரம் மற்றும் வெலிக்கடை சிறைபடுகொலைகள் தொடக்கம், இறுதி யுத்தம் வரை நடந்தவைகள் உணர்வுபூர்வமாக, இந்த நினைவேந்தல் நிகழ்வில் நினைவுகூரப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: