நாட்டின் தலைமை இந்த நாட்டை முன் கொண்டு
செல்கின்ற இந்த நிலையில் அந்த தலைமைக்கு கீழ் செயல்படுகின்ற சில சிலபுல்லுருவிகளின்
செயலை ஏற்க முடியாது.
இந்த நாட்டின் தலைமை இந்த நாட்டை முன் கொண்டு செல்கின்ற இந்த நிலையில் அந்த தலைமைக்கு கீழ் பிரதேச மட்டத்தில் செயல்படுகின்ற சில சிலபுல்லுருவிகளின் செயற்பாடுகளை ஏற்க முடியாது.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் செவ்வாய்கிழமை(13.01.2026) மாலை நடைபெற்ற முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
மக்கள் எதைச் செய்ய வேண்டுமென எனக்கு வாக்களித்தார்களோ அதை நான் செய்து கொண்டிருக்கின்றேன். நாம் முன்னெடுக்கும் வேலைகள் அனைத்தும் பல இடையூறுகளுக்கு மத்தியில் தொடராக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மக்களுக்கு எது தேவையோ மக்கள் என்ன நினைக்கின்றார்களோ, அதனை நான் இந்த பிரதேசத்தின் தவிசாளர் என்ற ரீதியில் நான் அதனை சரியாக முறையில் செய்வேன் செய்து கொண்டிருக்கின்றேன். அதற்காக எந்த இடையூறுகள் வந்தாலும் நாட்டின் தலைமை எதிர்த்தாலும் நாம் அதனை செய்து கொண்டே முன் செய்வோம் செல்வோம்.
ஆனாலும் இந்த நாட்டின் தலைமை இந்த நாட்டை முன் கொண்டு செல்கின்ற இந்த நிலையில் அந்த தலைமைக்கு கீழ் பிரதேச மட்டத்தில் செயல்படுகின்ற சில சிலபுல்லுருவிகளின் செயற்பாடுகளை ஏற்க முடியாது.
எமது பிரதேச சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் முன்மொழிக்கப்பட்டிருந்தது. அதில் எமது பிரதேச இத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் சர்வதேச தரத்திலான ஆங்கில மொழி மூலம் முன்பள்ளிகளை நிறுவுதற்கு நாம் தீர்மானித்திருந்தோம். அதன் முதற் கட்டமாக ஒரு கோடி ரூபா மதிப்பீட்டில் துறைநீலாவனை கிராமத்தில் முதலாவது பாடசாலையை நிறுவ உள்ளோம். அதற்காக இந்த நாட்டில் ஆளும் கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது பிரதேச சபையில் இருக்கின்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காமல் நடுநிலை வைத்திருந்தார்கள்.
எனது செயற்பாடுகள் அனைத்தும் எதுவித கட்சி பேதங்கள் அற்ற முறையிலேயேதான் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. நம்முடைய சமூகத்திற்கு அடிப்படையில் பாலர் பாடசாலையிலிருந்து ஆங்கில அறிவைப் புக்கட்ட வேண்டும் என்பதற்காக வேண்டிய தான் நாம் இந்த திட்டத்தினை முன் கொண்டு வந்திருக்கின்றோம்.
நாட்டில் இருக்கின்ற பிரதான அரசியல் கட்சிகளின் தலைமைகள் மத்தியில் ஒரு புரிந்துணர்வுகள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு கீழே இருக்கின்ற அவர்களுடைய உறுப்பினர்கள் சிறு பதவிகளில் இருக்கின்றவர்கள் பிரதேசத்துக்கு வருகின்ற அபிவிருத்திகளை எதிர்க்கின்றார்கள். எனவே இனிவரும் காலங்களிலாவது அனைவரும் காட்சி பேதங்களைக் கடந்து அபிவிருத்தி என்று வரும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நான் ஒவ்வொரு ஊருக்கும் வெவ்வாறான திட்டங்களை முன்மொழிவதில்லை துறைநீலாவணை தொடக்கம் குறுக்களமடம் வரைக்கும் சமமான அபிவிருத்திகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம்.
எனது கட்சி மக்களுக்கு சேவை செய்யும் என்ற விதத்தில்தான் மக்கள் தார்மீக கடமையாக எமக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெத்தலி பொட்டியான் மீன் போன்ற சிறியவர்கள் வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்றுதான் செயற்பட்டு வருகின்றோம். அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் எனது ஊருக்கு என்ன வேண்டுமோ அதனை நான் செய்வேன் என அவர இதன்போது தெரிவித்தார்.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment