10 Aug 2017

நள்ளிரவு வீதி விபத்தில் லொறி குடைசாய்ந்தது

SHARE
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை மயிலம்பாவெளி எனுமிடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் கொழும்பிலிருந்து சீமெந்துப் பக்கற்களை ஏற்றிக் கொண்டு மருதமுனை சென்று கொண்டிருந்த லொறி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.


புதன்கிழமை 09.08.2017 நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலுள்ள கடை மற்றும் மரம் ஒன்றில் மோதி குடை சாய்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் அதிருஷ்டவசமாக எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் நித்திரைக் கலக்கம், வேகக் கட்டுப்பாடு தளர்ந்தமை, லொறியில் அளவுக்கதிகமான சுமை என்பன ‪இந்த விபத்தை ஏற்படுத்தத் தோதாய் அமைந்திருந்திருக்கக் கூடும் என பொலிஸ் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகப் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: