29 Aug 2017

கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவுறுவதற்கு முன்னர் முதலமைச்சரால்; உறுதியளிக்கப்பட்ட தொழில் பேட்டையை அமைத்துதருமாறு வேண்டுகோள்

SHARE
கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுற இருக்கின்ற இக்கால கட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரால் உறுதியளிக்கப்பட்ட எமது பிரதேசதத்தில் அமைக்கப்படவுள்ள தொழில் பேட்டையை அமைத்துதருமாறு மீண்டும், வேண்டுகோள் விடுக்கின்றோம். என போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் செயலாளர் தெய்வநாயகம் சிவபாதம் தெரிவித்துள்ளார்.
மேற்படி சிவில் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும், போரதீவுப்பற்று பிரதேச மக்களின் தற்போதைய நிலமை தொடர்பிலும் ஞாயிற்றுக் கிழமை (27) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

கடந்த 30 வருட யுத்த சூழலில் எமது படுவாங்கரைப் பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இப்பகுதியிலுள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசம் முற்றுமுழுதாக யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்தது என்பது அனைவரும் அறிந்த விடையம்.  இன்னும் யுத்த வடுக்களைச் சுமந்தவண்ணம் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்போரதீவுப்பற்றுப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிவில் அமைப்பினூடாக எம்மால் இயன்ற சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாசம் உதவும் உறவுகள் அமைப்பு, அகிம்சா சமூக நிறுவனம், மக்கள் சக்தி அமைப்பு, இந்து சம்மேளம், போன்ற பல  மைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடாக இப்பிரதேசத்தில் பல உதவிகளை கடந்த 3 மாதகால்தினுள் மேற்கொண்டுள்ளோம்.

அந்த வகையில், 39 ஆம் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கச்சக்கொடி சுவாமிமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான பாதணிகளை வழங்கியுள்ளோம், அதுபோல் களுமுன்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மிகத்தூர இடங்களிலிருந்து வரும் 5 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும், 40 ஆம் கிராமத்திலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 35 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும், அப்பாடசாலையில் பயிலம், ஒரு மாணவிக்கு துவிச்சக்கரவண்டியும், சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மிகத் தூர இடங்களிலிருந்த கல்வி கற்றுவரும் 3 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும், அதுபோல் தும்பங்கேணிப் பகுதியிலுள்ள 300 முதியவர்களுக்கு உடைகளுமாக அண்மையில் வழக்கியிருந்தோம்.

இப்பிரதேசத்தில் ஒரு இடையீட்டாளர்களான இருந்து சிறிய உதவிகளாயினும் இப்பகுதியிலுள்ள மாணவர்களின் கல்வி வயர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற நோகுக்குடன் எமது சிவில் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையிலும் கூட எதிர் காலத்தில் இப்பிரதேசத்தில் பல செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் எமது அமைப்பு முயற்சித்து வருகின்றது. இப்பிரதேத்தில் அப்பியாசக் கொப்பிகளின்றிக் காணப்படும் மாணவர்களின் நலனினைக் கருத்தில் கொண்டு மிகவிரைவில் 4000 அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதுபோல் கணவனை இழந்து காணப்படும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதற்கும், தேசியமட்டத்தில் பங்கேற்கும் அளவிற்கு இப்பிரதேச விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் எமது போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் சுமார் 2500 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பற்று வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களது குடும்பங்கள் எதுவித தொழில்வாய்ப்புக்களும் அற்றநிலையில் அடுத்த கட்டநகர்வுக்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் புலம் பெயர் நாடுகளில் இருந்து எமது உறவுகளை நேசிக்கின்றவர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நமது பகுதியயை மேம்படுத்த முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடந்த 4 மாதத்திற்கு முன்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையின் ஏற்பாட்டின்கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சர் எமது பகுதிக்கு விஜயம் செய்து இப்பகுதியில் தொழில் பேட்டை ஒன்றை நிறுவுவதற்கு உரிய இடத்தையும் பிரதேச செயலாளருடன் பார்வையிட்டுச் செற்றிருந்தார். ஆhனல் அந்த தொழில் பேட்டை அமைப்பதற்குரிய எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக எமக்கும் தெரியவில்லை. எனவே கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவுறுவதற்கு முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் யுத்தினாலே பாதிக்கப்பட்டு வேலையற்று இருக்கின்ற போரதீவப்பற்றுப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என அவ்விடத்தில் கூறிவிட்டுன் சென்றவர்.

ஆனால் இதுவரையில் தொழில்பேட்மைக்குரிய வேலைத்திட்டங்கள் ஏதுவும் ஆரம்பிக்கப்படவில்லை, அந்த தொழில் பேட்டை அமையுமாக இருந்தால் சுமார் 2500 இற்கு மேற்பட்டோர் ஓர் இடத்திலே தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கும், இப்பகுதி மக்கள் அனைவரும் யுத்த வடுக்களை மறந்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டக்கூடிய சூழல் ஏற்படும்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுற இருக்கின்ற இக்கால கட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தங்களால் உறுதியளிக்கப்பட்ட எமது பிரதேசதத்தில் அமைக்கப்படவுள்ள தொழில் பேட்டையை அமைத்துதருமாறு மீண்டும், மீண்டும்,  வேண்டுகோள் விடுக்கின்றோம் என என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: