29 Aug 2017

பேரினவாத சக்திகள், அடிப்படைவாதிகள், சிறுபான்மை மக்களை மோதவிட்டு குளிர்காய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் - ஸ்ரீநேசன் எம்.பி

SHARE
நல்லாட்சி அரசு கடந்த காலத்தில் ஏற்படுத்திய தாமதங்கள் அல்லது இழுத்தடிப்புக்கள் என்பவற்றை, மேலும் செய்யாமல் விரைவாக தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும், உருப்படியான ஒரு அரசியல் தீர்வைத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தென்னிலங்கையிலிருக்கின்ற அடிப்படைவாதிகள் குழப்புகின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு இழுத்தடிக்கின்ற போக்கைச் செய்யக் கூடாது. இன்று பேரினவாத சக்திகள், அடிப்படைவாதிகள், சிறுபான்மை மக்களை மோதவிட்டு குளிர்காய்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஞாயிற்றுக் கிழமை (27) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

இலங்கையில் நல்லாட்சி அரசு பெறுப்Nபுற்று தற்போது 2 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது நாங்கள் இருக்கின்றோம். இன்றய நிலையில் இந்த நல்லாட்சி எந்த அளவில் பயணம் செய்திருக்கின்றது என்பது தொடர்பில் ஓர் மீள் பார்வை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மக்கள் எதிர் பார்த்த எதிர் பார்ப்புக்ள இருக்கின்றன.  

தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து நிற்கின்ற இந்த தேசிய இனப்பிரச்சனைக்கு உடனடியாக நிலைத்து நிற்கக்கூடிய நியாயமான தீர்வு ஒன்றினைக் காணவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருக்கின்றது. எனவே காலத்தைத் தாழ்த்தாது நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசு தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு அவர்களின் சொந்தக் கால்களில் ஊன்றி வாழ்வதற்கு ஒரு நிம்மதியான சூழலை உருவாக்குவதற்கு மிகவும் துரிதமாகப் இந்த  அரசு பயணிக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

கால இழுத்தடிப்புக்கள் என்பது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எனவே துரிதமாகச் செயற்பட்டு இந்த தேசிய இனப்பிரச்சனைக்கு, மிகவும்; நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அர்தபுஸ்ட்டிய தீர்ர்வைக் காணவேண்டிய தேவை இருக்கின்றது.

காணாமலாக்கப்பட்டவர்களின் விடையத்தில் பொறுப்பற்றவித்ததில் நல்லாட்சி அரசு இருக்கமுடியாது. காணாமலாக்கப்பட்டவர்கள் தொர்பாக செயலகங்களை உருவாக்கி அதன்மூலமாக விசாரணைகளை மேற்கொண்டு, காணாமலாக்கப்பட்டவர்களின் பரிதவிப்புகளுக்குரிய சரியான முடிவை எடுப்பதற்குரிய கடப்படு இந்த அரசுக்கு இருக்கின்றது. எனவே காணாமலாக்கப்பட்டவர்கள் மனிதர்கள், அவர்களுக்கு உறவுகள் இருக்கின்றார்கள் அந்த உறவுகளுக்கு அர்தமான நீதியான தீர்வைக் கொடுக்கவேண்டும் என்பது முக்கியமான விடையம். 

காணாமலாக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கின்ற அந்தப் பிரிவினர் யாராக இருந்தாலும், அவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டிய அவசியமும் இந்த நல்லாட்சி அரசுக்கு இருக்கின்றது. காணாமலாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களப் பாதுகாப்பதற்காக எந்த அமைச்சரோ அல்லது எந்த அரசியல்வாதியாக இருப்பாரேயானால், நாங்கள் எதிர்பார்க்கும் நிலைத்ததுநிற்கக்கூடிய நீதியான தீர்வைக் கண்டுவிட முடியாது. எனவே இந்த விடையத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லபொறிமுறை, நல்லிணக்க செயன்முறை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, போன்ற போக்குக்கள் காணவேண்டுமாக இருந்தல் சிறையில் வாடுகின்ற தமிழ் கைத்திகளின் விடுதலை தொடர்பாக மிகவும் காத்திரமான முடிவுகளை இந்த அரசு எடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நீதியமைச்சு இந்த விடையத்தில் பலவிதமான கருத்துக்களையும், காரணங்களையும், கூறிக்கொண்டு, ஏனோதானோ என்ற போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தது. நீதியமைச்சின் இந்த அசமந்தப் போக்கு தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற நிலமையும் காணப்படுகின்றது. எனவே இந்த விடையத்திலும் கூடிய கவனம் எடுக்கவேண்டிய தேவை உள்ளது.

தற்போது தமிழ் பிரதேசங்கள் நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னரும்கூட பல விடையங்களில், புறக்கணிக்கப்பட்டுவரும்  நிலமை காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த  அபிவிருத்திகளோ, வேலைவாய்ப்புக்களோ இடம்பெறுவதாகக் கூறமுடியாது. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவே;றற முடியாத நிலமை காணப்படுகிறது.

உன்னிச்சையிலிருந்து குடிநீர் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ், 70 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மக்கள் குடிநீரைப் பெறக்கூடிய நிலமை காணப்படுகின்றது. ஆனால் உன்னிச்சைக் குளத்தை அண்டிய மக்களுக்கு இக்குடிநீர் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நீர் வழங்கல் வடிகாலமைச்சர் ரவூவ் ஹக்கீம் அண்மையில் வாழைச்சேனையில் நீர் வழங்கல் நிலையம் ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தர். அந்த மக்களுக்கும் குடிநீர் தேவைதான் ஆனால் உன்னிச்சைக் குளத்திற்குப் பக்கத்திலிருக்கின்ற கிராம மக்களுக்கு சுமார் 16 கிலோ மீற்றருக்குள் இருக்கின்ற மக்களுக்கு இன்னும் குடிநிர் வழங்கப்படவில்லை, என்ற விடையத்தை நான் அடிக்கடி அமைச்சருக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அமைசின் காரியாலயத்திற்கும் நேரில் சென்று முன்மொழிவு ஒன்றையும் வழங்கியிரு;ககின்றேன். அந்த பிரதேச மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டிய கடப்பாடு அமைச்சசுக்கு உண்டு. ஆனால் அவர் இவ்விடையத்தில் கவனம் எடுப்பது போதாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அபிவிருத்திகள் என்று சொல்லும்போது குடிநீர் அபிவிருதியைச் செய்யாமல் செல்வது என்பது ஒது பக்கச்சாதர்பான பாரபட்சமான போக்காகத்தான் இருக்கும் என்பது என்னுடைய பார்வையாக இருக்கின்றது. இதனைவிட தொழிற்சாலைகள், பண்ணைகளை உருவாக்கி எமது இளைஞர் யுவதிகளுக்கு, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய தார்மீக் பொறுப்பும் இருக்கின்றது. மற்றும் பாலங்கள் பாதைகளை என்பவற்றையும் துரிதமாகச் செய்ய வேண்டும், இன்றும் வீடுகளை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணைங்க பிரதம அமைச்சர் அவர்கள் வடக்கு கிழக்கிலே வீடுகளை இழந்து வாழ்கின்றவர்களுக்கு 50000 கல்வீடுகளை அமைப்பதற்கு ஓதுக்கீடுகளைச் செய்வதற்கு அமைச்சரவைத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றார். இதனை நாம் பாராட்டுகின்றோம்.

யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், மற்றும் அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்களையும், வழங்க இந்த அரசு துரிதமாக செயற்பட வேண்டும். இந்த நிலையிலிருந்த அரசு எந்த வித்திலும் பின்னோக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலமை ஏற்படும். 

எனவே நல்லாட்சி அரசு கடந்த காலத்தில் ஏற்படுத்திய தாமதங்கள் அல்லது இழுத்தடிப்புக்கள் என்பவற்றை, மேலும் செய்யாமல் விரைவாக தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும், உருப்படியான ஒரு அரசியல் தீர்வைத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தென்னிலங்கையிலிருக்கின்ற அடிப்படைவாதிகள் குழப்புகின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு இழுத்தடிக்கின்ற போக்கைச் செய்யக் கூடாது. இன்று பேரினவாத சக்திகள், அடிப்படைவாதிகள், சிறுபான்மை மக்களை மோதவிட்டு குளிர்காய்கின்ற ஒரு செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள். அதற்காக சிறுபான்மை மக்களைப் பிரித்தாளுகின்ற தந்திரங்கள்கூட ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு சிறுபான்மை இனத்திற்கு உதவுவது போன்று ஒரு முகத்தையும், அடுத்த கட்டமாக இன்னுமொரு சிறுபான்மை இனத்திற்கு உதவுவது போன்ற இன்னுமொரு முகத்தையும் காட்டிக்கொண்டு மக்களைப் பிரித்தாளுகின்ற தந்திரங்கள்கூட கையாளப்படுகின்றன எனவே இந்த இடத்தில் மிகவும் கவனமாக இந்த நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டும் என இந்தக் காலகட்டத்தில் வலியுறுத்திக் கூறுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: