யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் (ஐளெவவைரவந கழச றுயச யனெ Pநயஉந சுநிழசவiபெ) நிறுனத்தின் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிங்கள, தமிழ், ஆங்கில் மொழி ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான புலனாய்வு ஊடகம் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று நீர்கொழும்பு கோல்டன் ஸ்டார் பீச் ஹோட்டலில் வார இறுதி நாட்களில் (30, 31- 07.2017) நடைபெற்றது.
இதன்போது முழு நேர சுதந்திர ஊடகவியலாளர்கள் சுமார் 20 பேர் பங்குபற்றினர்.
இடப்பெயர் ஊடகம், ஊடக சந்திப்புக்களின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள், செய்தி மூலங்களைப் பெறும் வழிமுறைகள், தகவல்களைப் பெறுதல், தகவல் ஊடகம், ஊடக ஒழுக்கநெறி, புலனாய்வு ஊடகத்தின்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். முழுமையான புலனாய்வு ஊடக அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான ராய்டர் செய்தியாளர் சிஹார் அனிஸ், டில்ருக்ஸி ஹந்துன்நெத்தி, யுத்தம் மற்றும் சமாதனங்கள் தொடர்பில் அறிக்கையிடும் நிறுனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ. முஹம்மத் அஸாத், ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.
ஊடக தொழிற் சங்க சம்மேளனத்தின் தலைவர் கருணாரெத்ன கமகே, அதன் செயலாளர் லங்காபேலி தர்மசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment