இப்பிரதேசங்களில் இளைஞர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் போதைப் பொருள் ஊடுருவலைத் தடுக்க ஒருங்கிணைந்த கண்காணிப்புத் தேவை என ஏறாவூர் நகர பதில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.
வாழ்வாதார சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை 16.08.2017 இரவு ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை மண்டபத்தில் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பதில் பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்@ வாழ்வாதார சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதிகளை நாம் தகுதியானவர்களை இனங்கண்டு வழங்கி வருகின்றோம். இது மிகவும் காலத்துக்கேற்ற தேவையாகும். இதனைக் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்கள் எல்லோரும் பயனடைந்து கொள்ள வேண்டும்.
சமூக நிறுவனங்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் உபகரணங்கள் என்பன கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.
நோக்கத்திற்கு அமைய இந்த உபகரணங்களையும் இன்ன பிற ஊக்குவிப்பு உதவிகளையும் பயன்படுத்தி பயனாளிகள் உச்ச பயனை அடைந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு.
அதேவேளை, நமது பிரதேசத்திலே தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அது சந்தேகப்பட முடியாத பல்வேறு வடிவங்களில் ஊடுருவியுள்ளது.
இதனையிட்டு இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக நிறுவனங்கள் அத்தோடு ஒவ்வொரு குடும்பமும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நேரத்தை வீணடிக்காத பொழுது போக்குகள் தேகாரோக்கிய விளையாட்டுத்துறை என்பன மேம்படுத்தப்பட வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிந்தளவு முயற்சி செய்து கொண்டு வருகின்றார்கள்.
ஒரு பக்கம் அபிவிருத்தி மறுபக்கம் போதைப் பொருள் பாவனை என்றிருந்தால் அபிவிருத்தியைத் தாண்டி அழிவுதான் மிஞ்சும்.
நீண்டகாலத் திட்டம் தீட்டப்பட்டு சகலதுறை அபிவிருத்தியும் இடம்பெறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment