ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தொண்டையில் ஏற்பட்ட உபாதை ஒன்றிற்காக சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாக கொழும்பு ராஜகிரியையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை அவர் மேற்கொண்டிருந்தபோது அங்கு கடுங்குளிர் காரணமாக தொண்டையில் ஒரு வித அழற்சி ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பேசும்பொழுது சிரமம் இருந்ததாகவும் அதற்கான சத்திரசிகிச்சையே வியாழக்கிழமை 20.07.2017 மேற்கொள்ளப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment