23 Jul 2017

பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்க தன்னார்வ அமைப்பினால் பாடசாலைக்கு நிதி உதவி

SHARE
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அவ்வித்தியாலயத்திற்கு 65 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்ததாக இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதி எம்.தவராஜ் தெரிவித்தார்.

மாணவர்களுக்குத் தேவையான கற்றல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்நிதி அளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (20.07.2017) இடம்பெற்ற காசோலை கையளிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரியும் புதூர் மற்றும் அதனை அண்டிவாழும் ஐந்து கிராங்களைச் சேர்ந்த அன்பர்களின் பரோபகார நிதிப் பங்களிப்பின் மூலம் இத்தொகை பெறப்பட்டதாக இணைந்த கரங்கள் அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: