கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10 வது விளையாட்டுப்போட்டி கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி 19 ஆம் திகதி புதன் கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவிதியாலயம் சாதனையை நிலைநாட்டியுள்ளது. இதன்போது 16 தங்கப்பதக்கங்களையும், 13 வெள்ளிப்பதக்கங்களையும்,
6 வெண்கலப்பதக்கங்களையும், பெற்று மொத்தமாக 137 புள்ள பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு களுதாவளை மகாவித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இதில் கிழக்கு மாகாணத்திள் 14 வயதின் சிறந்த மெய்வல்லுனராக ஜே.றக்சனாவும், 16 வயதின் சிறந்த மெய்வல்லுனராக ஜெ.ரிசானனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, கிழக்கு மாகாணத்தின் சிறந்த ஆண் மெய்வல்லுனர் பாடசாலையாகவும், கிழக்கு மாகாணத்தின் சிறந்த ஆண் அஞ்சல் அணியாகவும், மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
புள்ளிகளின் அடைப்படையில் அம்பாறை கல்வி வலயம் 208 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், பட்டிருப்புக் கல்வி வலயம் 203 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், மட்டக்களப்புக் கல்வி வயம் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இவ்விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், இம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், வியாழக்கிழமை பாடசாலைக்கு நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment