23 Jul 2017

கட்டுரை மட்டக்களப்பு மண்ணில் வியத்தகு சாதனைகளை குவிக்கும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி

SHARE
இலங்கையில் பிரித்தானிய குடியேற்ற நாட்டாட்சி நிலவிய காலத்தில் தேசாதிபதியாகப் பணியாற்றிய றொபட் பிறவுன்றிக் அவர்கள் இலங்கையில் வந்து இறங்கிய மெதடிஸ்த மி~னரிமார்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதாவது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பாடசாலைகளை அமைக்குமாறு அதன் பிரகாரம் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஆங்கிலமொழிப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு ஆங்கிலமொழி கற்பித்தல் மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் தாபிக்கப்பட்டு நடாத்தப்பெற்று வந்த இலங்கையின் முதனிலைப் பாடசாலை மெதடிஸ்த மத்திய கல்லூரியாகும். இக்கல்லூரி இன்றும் அணையா விளக்காக பிரகாசித்துக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.

இப்பாடசாலை தாபிக்கப்பட்ட வரலாற்றினை பின்நோக்கிப் பார்க்கையில் தேசாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் 1814ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியன்று மெதடிஸ்த மி~னரியைச் சேர்ந்த வண. வில்லியம் ஒல்ட் அவர்கள் மட்டக்களப்புக்கு வந்தார். இவர் பாடசாலை ஒன்றினை அமைப்பதில் தீவிரமாக இருந்தார். அவ்வேளையில் இங்கிருந்த திரு சைமன் (சோயகப்) என்னும் கலக்டர் அவர்கள் ஆங்கில ஆண்கள் பாடசாலை ஒன்றினை அமைப்பதற்காக வில்லியம் ஒல்ட் அவர்களுக்கு உறுதுணையாக ஒத்தாசை நல்கினார். இதனைப் பெற்றுக்கொண்டு அரினால் வழங்கப்பட்ட அரச களஞ்சித்தால் இலங்கையின் முதலாவது பாடசாலையினை ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை ஆரம்பிக்கும் போது ஐந்து மாணவர்களுடன் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் பிரித்தானிய இராணுவத்தின் அநாதைக் குழந்தைகள். நான்காவது மாணவன் இராஜகாரிய தானியேல் சோமநாதர் எனும் பெயரால் வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு கச்சேரி முதலியராவார். ஐந்தாவது மாணவன் பற்றிய தகவல் பெற்றுக்கொள்வதில் சிரமமாக இருக்கின்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டு தூரநோக்கோடும் தூய சிந்தனையோடும் செயற்பட்டும் வந்தவேளையில் எதிர்பாராத விதமாக 1815ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேரியா நோயினால் மரணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ் இழப்பு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரால் ஏற்றிவைக்கப்பட்ட தீபம் இன்றும் அணையாமல் பல இன மக்களுக்கும் பிரகாசத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய காலத்தில் 5 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 40 மாணவர்கள் உயர்வுக்கு காரணமாக இருந்தது. வண வில்லியம் ஒல்ட் அவர்களின் சேவையின் மகிமையும் இறைவனின் ஆசீர்வாதமும் துணை நின்றது. இதனாலே இன்றும் ஒல்ட் அடிகளார் மறைந்து விட்டாலும் அவரால் ஏற்றி வைத்த அணையாதீபம் ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதினால் அடிகளார் அவர்கள் பெருமைக்குரியவராக கற்றவர்கள் முன் நின்று உலாவுகின்றார்.

இவரின் இடைவெளியினை உடன் நிரப்புவதற்காக பொருத்தமான வரைத் தெரிவு செய்யும் வரை அக்கால இடைவெளியினை நிரப்புவதற்கு அக்காலத்தில் இருந்த இராணுவத்தளபதி ஒருவர் பொறுப்பேற்று நடாத்தி வருகையில் 1861ம் ஆண்டு யூலை மாதம் வண.எலிஜா ஜக்சன் அவர்கள் பொறுப்பினைக் கையேற்று நடாத்தி வந்தார். இவரால் 1817ல் எழுதப்பட்ட வாசகமொன்றின் மூலம் இவரின் ஈடுபாடும் தூரநோக்கும் எமக்குப் புலனாகின்றது. 'தேவாலயத்தில் இசைக்கப்படும் கீதங்கள் ஓரளவு நன்றாய் இருக்கின்றன. பாடசாலையில் உள்ள ஒல்லாந்து சிறுவர்களுக்கும் மலபார் சிறுவர்களுக்கும் வாரத்தில் மூன்றுதடவை ஆராதனைப் பாடலைப் பாடுவதற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்" எனக் குறிப்பிட்டிருந்தமை பின்னரும் மெதடிஸ்த கல்லூரி மாணவர்கள் இதில் ஆர்வம் காட்ட வழிகோலியது.

இவ்வாறு இறைவன் ஆசீர்வாதத்துடன் வளர்ந்து வந்த இப்பாடசாலை யானது 1821ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வியில் ஆர்வம் இருந்த போதிலும் கற்றல் உபகரணம் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினர். இதனால் இதற்காக வாழை இலையின் பின்புறம் எழுதும் ஏடாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும் 1839ம் ஆண்டு தேசாதிபதியாக பொறுப்பேற்ற மேமிர் ஸ்ரூவர்ட் மக்கன்ல் அவர்கள் கல்வியில் விருத்தியினை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வழிகளிலும் ஊக்கம் கொடுத்து வந்தார். நிரந்தரப்பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கான உதவிகளையும் வழங்க முன்வந்தார். இவ்வாறான முன்னேற்றங்களைக் கண்டு விடும் வகையில் 1840ம் ஆண்டு கற்பிப்பதற்கு சிறந்த ஆசிரியர்களைப் பெற வாய்ப்பு ஏற்பட்டது. அந்தவகையில் சொலமன் சேதுகாவலர் ஹென்றி, நவசிவாயம் சாமுவேல் றோனிஸ் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களது ஒழுக்கநெறியும் பண்பும் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருந்தது. இதனால் மாணவர்களிடத்து ஒழுக்கநெறியும் கீழ்ப்படிவும் மெச்சத் தக்கதாக இருந்தமை தொடர்ந்தும் கல்லூரியின் ஒழுக்கம் நிலை பெற்றுள்ளமை பெருமிக்கக்கூடியதாகவுள்ளது. 

மேலும் கல்லூரியின் வரலாற்றில் 1870ம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பினை ஏற்ற வண.ஜோன் பிறவுண் பாதிரியார் சிறந்தவராக விளங்கினார். மாணவர்களிடத்தில் ஒழுக்கத்தில் கண்டிப்பும், அன்பும், பரிவும் உடையவராக செயற்பட்டார் என்பதற்கு பின் உதாரணம் வெளிச்சம் போட்டுக் காட்டு கின்றது. படசாலை நேரத்தில் குழப்பம் செய்யும் மாணவர்களுக்கு தனித்து நிற்கும் தண்டனையினை வழங்கி படசாலை நேரம் தவிர்ந்து அம்மாணவர்களை மி~னரி இல்லத்திற்கு அழைத்து நற்சிந்தனைகள் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். முடிந்ததும் பட்டர் தடவிய பாண் துண்டினைக் கொடுத்து மகிழ்ச்சியாக வீட்டுக்கு அனுப்புவார். இவ்வாறான இரக்க சுபாவம் கொண்டவராக காணப்பட்டார். இவரை அடுத்து வந்தவர்களில் 1872ம் ஆண்டு பதவியேற்ற வண. ஜோன் பு.பியசன் பாதிரியார் பாடசாலைப் பொறுப் பேற்றவராவார். பாடசாலையில் அணிநடையினை ஆரம்பித்தவராவார். இவர் அணிநடை மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களும் செய்ய வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். இன்றும் பாடசாலைகள் அணிநடையினை பழகி செயற்பட்டு வருவதைக் காணலாம். இதனால் மாணவர்கள் கற்றலில் உற்சாகமாக ஈடுபடவும் ஆசிரியர்களுக்கு தேகப்பயிற்சியாகவும் அமையும் என்பதே இவரது நம்பிக்கையாகும். இவர்களது அடித்தளத்தின் 1875ம் ஆண்டளவில் மாணவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரிக்க காரணமாக இருந்தது. இதில் கூடுதலான மாணவர்கள் ஆங்கில அறிவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்களாவர் நான்கு வருடங்களில் இருமடங்காக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணம் பாடசாலையில் இடம்பெற்ற கற்பித்தலாகும். இதனைத் தொடர்ந்து கீழு;பிரிவு மேல்பிரிவு என இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெற்றது. ஆக்கபூர்வமான கடின உழைப்புக்கு அத்திவாரம் இடப்பட்டது. இவ்விளைவினால் அரசின் தொழிலுக்கான போட்டிப் பரீட்சையில் நால்வர் தெரிவு செய்யப்பட்டமை பாடசாலையின் செயற்பாட்டின் பிரதிபலனாகவே கருதப்பட்டது. இதன் பெருமை அதிபர், ஆசிரியர்களையே சாரும்.

சிறந்த கல்வியினை வழங்குவதில் கட்டட வசதி ஒரு தடையாகவே இருந்து வந்தது. இருந்தபோதிலும் மாணவர் தொகை அதிகரித்தது. இதற்கு ஆதாரமாக 1886ம் ஆண்டு மட்டக்களப்புக்கு சேகரமுகாமை குருவாக இருந்த வண. பு.பு. றிமர் அவ்கள் வடஇலங்கை சபை கூட்டத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் ஆண்களுக்கான புது மத்திய பாடசாலை அமைப்பதாகும். இப்புதுக் கட்டடம் விசாலமான மத்திய மண்டபத்தைக் கொண்டதாக அமையவேண்டும். காரணம் மட்டக்களப்பில் பொதுக் கூட்டங்கள் நடாத்துவதற்காக ஒரு மண்டபம் இல்லாமையேயாகும். இதன்பிரகாரம் 1887ம் ஆண்டு யூலை 21ம் நாள் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1889ல் கட்டடம் முடிக்கப்பட்டது.

கல்லூரியின் வரலாற்றில் 1930 - 1960காலப் பகுதி முக்கியமானதாகும். உலகமகா யுத்தம் ஏற்பட்டமைக்கும் அரசில் சில திருத்தங்கள் ஏற்பட்ட காலம். மக்கள் அதிகாரத்திற்கு இட்டுச் சென்ற காலமாகும். 1939ம் ஆண்டு வண.மேஜர் காடமன் நியமிக்கப்பட்டார். இவர் அதிகமான பாடங்களைக் கற்பிப்பதில் திறமையானவராகக் காணப்பட்டார். ஒரு பாடசாலையின் சிறந்த நோக்கம் கெட்டித்தனத்தை உருவாக்குவதை விட ஒழுக்கமுள்ள நன்மாணாக்கரை உருவாக்குவதே சிறந்த பணியாகும் என அவர் நம்பினார். அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். இவ்வாறான செயற்பாடே இன்றும்கூட மத்திய கல்லூரி ஒழுக்கத்துக்கு முதலிடம் கொடுப்பதாகும். இவருடைய கவனம் விளையாட்டு, முதலுதவிச் செயற்பாடுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1942ம் ஆண்டு திரு.எஸ்.வி.ஒ.சோமநாதர் அதிபர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட முதலாவது இலங்கையராவார். அப்போது மாணவர் தொகை 300 ஆக அதிகரித்தது. இதில் 50 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்து கற்றனர். 1945 ஒக்டேபார் 4ம் திகதி உயர்தரப்பிரிவில் கலைப்பிரிவு 4 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இவரது காலத்தில் நோபிள் ஏ.காசிநாதர் எனும் மாணவன் விசேட சித்தி பெற்றார். இப்பெறுபேறு இலங்கையில் மிகச் சிறந்த பெறுபேறாகும்.

இலங்கை சுதந்திரத்தினைத் தொடர்ந்து கல்வியில் எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்ற கோட்பாடுக்கு அமைய அரசியல் சுதந்திரத்தினைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட விடயம் தேசியமட்டத்தில் உணரப்பட்டது. இதற்குச் சாதகமாக 1961ல் உதவிபெறும் பாடசாலைகள் கிறிஸ்தவ மி~னரிமார்களின் நிருவாகத்துக்குட்பட்ட பாடசாலைகளின் உரிமைகள் அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட்டது. பாடசாலைகளின் சொத்துக் கள் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் அரசசேவையில் உள்வாங்கப்பட்டனர். அதன்பிரகாரம் 1962.05.25ம் திகதி மட்ஃமெதடிஸ்த மத்திய கல்லூரியும் உள்வாங்கப்பட்டது. இதன்போது கல்லூரியில் அதிபர் உட்பட்ட 15 நிரந்தர ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். 400க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்றனர். இக்கல்லூரியானது பல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் புரிந்துள்ளமை இதன்போது பணியாற்றிய அதிபர் ஆசிரியர்களின் செயற்பாடாகும். இந்த அதிபர் வரிசையில் திரு. பிறினஸ் காசிநாதர் முக்கிய பாத்திரம் வகித்தவராவார். ஒழுக்கத்துடன் சிறந்த கல்வியினையும் வழங்குவதில் ஆர்வம் காட்டினார். மாணவர்கள் மத்தியில் கண்டிப்பும் பரிவும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவரது சேவை கல்லூரிவரலாற்றில் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனால் கற்றசமூக மத்தியில் பெரும் தனி மதிப்பினையும் பெற்று விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

இவருடைய நிருவாக திறமையின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்ட திரு. யு.யு. அருளண்ணராசா, திரு.மு.பு.அருளாந்தம், திரு. ஐ.கமலராஜா அதிபர்களும் போற்றத் தக்கவர்களாவர். அவர்களைத் தொடரந்து தற்போது அதிபராகக் கடமை ஆற்றும் திரு. து.சு.P.விமல்ராஜ் அவர்கள் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு முழுநேர ஊழியனாகச் செயற்பட்டு வருகின்றார். ஒழுக்கமேம்பாட்டில் கண்ணும் கருத்துமாக தனது பங்களிப்பினை ஆற்றி வருகின்றார். கண்டிப்பும் பரிவும் தன்னகத்தே கொண்ட அதிபராவார். முன்னோர் காட்டிய வழியில் தளம்பலை ஏற்படுத்தாமல் சேவையினை ஆற்றுவதே பாரம்பரிய செயற் பாடுகளிலும் அக்கறை காட்டி வருகின்றார். இவரது சேவை மெச்சத் தக்க வகையில் மாணவர் வரவில் அதிகரிப்பைக் காணக்கூடியதாகவுள்ளது. பிறசமூகத்தவரின் அரவணைப்பையும் பெற்று இன ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்குகின்றார். இவருக்கு உறுதுணையாக பிரதி அதிபர்கள் இருவரும், உதவி அதிபர்கள் இருவரும் சேவையாற்றுவது மேலும் பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.

வளர்ந்து வந்த இக்கல்லூரி இலங்கையின் முதலாவது பாடசாலை மாத்திர மல்லாது மட்டக்களப்பின் முதன்மைப் பாடசாலையாகவும் விளங்குகின்றது. இன்று 1800 மாணவர்களுடனும், 78 ஆசிரியர்களுடனும் 6 கல்வி சாரா ஊழியர்களுடனும் பெருவிருட்சமாக மேலோங்கி நிற்கிறது. 1814ல் ஏற்றிய தீபம் என்றென்றும் அணையாத தீபமாக இருக்க இறைவன் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்.
இப் பாடசாலையானது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக தேசிய மாணவர் படையணிச் செயற்பாடு, விளையாட்டு உட்பட ஏனைய செயற்பாடுகளிலும் பங்கு பற்றி பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றனர்.















க.விஜயரெத்தினம்



SHARE

Author: verified_user

0 Comments: