நல்லிணக்கத்தைப் பற்றி சதா பேச வேண்டிய ஊடகம். ஒருவரோடு ஒருவரை மூட்டிக் கொடுக்கின்ற ஒருவரது செயற்பாட்டை காட்டிக் கொள்கின்ற அல்லது இனவாத ரீதியாக பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றதாக இருக்கிறது இவ்வாறான ஊடகங்கள் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
தேசிய ஒருங்கிணைப்பபு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையில் சமயசார் பாடசாலை கல்வி முறைமையினுள் நிறுவனப்படுத்தல் எனும் கருப் பொருளில் தேசிய ஒருங்கிணப்பு நல்லிணக்க அமைச்சின் அனுசரணையில் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் பொன்தானா மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,
நாங்கள் கடந்த காலத்திலே நிகழ்காலத்திலே இப்போது பார்க்கின்ற பார்வை எங்களுடைய ஊடகங்கள் சில ஊடகங்கள் இந்த விடயத்திலே எமது நாட்டிலே அவசரப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் ஏதாவது விடயங்களைச் சொல்லி செய்து அந்த செய்தியை வெளியே கொண்டு வந்து தங்களது பெயர்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களுடைய தர நிலையினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்கின்ற அந்த பிரயத்தனங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது நாங்கள் எவ்வளவு தூரம் இதைப் பற்றி பேச வேண்டிள்ளது.
இந்த நாட்டிலே நல்லிணக்கத்தைப் பற்றி சதா பேச வேண்டிய ஒரு சமூகம் தான் ஊடகம். இந்த ஊடகம் ஒருவரோடு ஒருவரை மூட்டிக் கொடுக்கின்ற ஒருவரது செயற்பாட்டை காட்டிக் கொள்கின்ற அல்லது இனவாத ரீதியாக இதை இவ்வாறு செய்விக்க வேண்டும் என்று அவர்களை காட்டிக் கொடுத்து அதிலே அவர்களை இல்லாமல் செய்து மழுங்கடிக்கின்ற அல்லது அதிலிருந்து பூதாகரமான மாற்றத்தினையும் முயற்சியினையும் இந்த நாட்டிற்குள்ளேயும் மாவட்டத்திற்குள்ளேயும் பற்ற வைக்கின்ற செயற்பாட்டைச் செய்கின்றன. இந்த ஊடகங்கள் பற்றி நீங்கள் விளிப்பாக இருக்க வேண்டும்.
நாங்கள் முதலிலேயே நுனிப் புல் மேய்கின்ற அதிகம்பேர் இருக்கிறோம். தலையங்கத்தை பார்த்து விட்டு தீர்ப்பை எழுதுகின்ற நீதிபதிகள் அதிகம்பேர் இந்த மாவட்டத்திலே இருக்கின்றார்கள். பிரச்சனையை விசாரி;ப்பதற்கு சாட்சிகள் தடையப் பொருட்களை விசாரிப்பதற்று தயார் இல்லாத அதிகாரிகள் ஆயிரம் பேர் இந்த மாவட்டத்திலே ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். படித்தவர்கள் இருக்கின்றார்கள். பாமரர்களுடைய பிரச்சனைகள் மக்களுடைய பிரச்சனைகள் இந்த விடயங்கள் என்ன நடந்திருக்கின்றது.
இவர்களுக்கான நியாயம் என்ன என்பது அடித்து ஆதாரத்தோடு சொன்னாலும் கூட அதனை நாங்கள் நியாயப்படுத்தி செய்து கொடுக்கின்றதில் நாங்கள் காட்டும் தயக்கம் இந்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்குள்ளே முரண்பாடும் அந்த அதிகாரிகளிடத்திலே இருந்து தூரப்பட வைக்கின்ற நிகழ்ச்சி நிரலையும் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நாங்கள் கண்டுகொண்டிருக்கின்றோம்.
நல்ல விடயங்களை விதைக்கின்ற நல்ல உறவுகளைப் பற்றி சொல்லுகின்ற அந்த மக்கள் சமூகத்தினடத்தில் இருக்கின்ற நல்ல பண்பை பற்றி சொல்லுகின்ற, அவர்களுடைய விழாக்களுக்கு அழைத்துச் செல்லுகின்ற, இவர்களுடைய விடயங்களை அவர்களுக்கு காட்டிக் கொடுக்கின்ற என்கிற விடயதானத்தில் நாங்கள் கிரமமாக நின்று பார்க்க முடியுமென்றால் இந்த அடைவுமட்டத்தில் முதல் கட்ட படியை நாங்கள் வைத்துக் கொள்ள முடியாமல் போகும்.
எனவே செய்ய வேண்டும் என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு தியாகத்தோடு செய்கின்றவர்கள் மாத்திரம் தான் இந்த நாட்டிற்கும் இந்த சமூகத்திற்கும் எதிர்காலத்திலே எமது மறைவிற்குப் பின்பும் நாங்கள் தேடிக் கொள்கின்ற நல்ல விடயமாக இது இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு எதிர்பார்க்கக் கூடிய காலகட்டத்தில் நடக்கத் தவறி இருந்தாலும் கூட இந்த காலகட்டத்திலாவது எங்களுடைய மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தலைவர் அமைச்சர் பௌசி அவர்கள் இதை இங்கு கொண்டு வந்து செய்து காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஜனாதிபதி அவர்களுடைய வழிகாட்டலிலே பிரதமருடைய ஆலோசனையிலே இந்த வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் செக்கின்ற விடயம் நமது நாட்டில் நல்லிணக்கத்திங்கு மிகவும் முக்கியமானது.
0 Comments:
Post a Comment