19 Jul 2017

மதங்கள், 2 மொழியுடைய நாங்கள் பிரிந்து வாழ்வதற்குரிய வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றோம் - மட்டு அரச அதிபர்

SHARE
25 பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மொழியுடன் இத்தாலி என்ற ஒரு நாடு உருவாக முடியுமென்றால், ஆக நான்கு இனங்களையும் நான்கு மதங்களையும் இரண்டு மொழிகளையும் கொண்டிருக்கின்ற இந்த சின்ன நாட்டிலே நாங்கள் மேலும் மேலும் பிரிந்து வாழ்வதற்குரிய வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றோம் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள். தெரிவித்தார்.

 தேசிய ஒருங்கிணைப்பபு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையில் சமயசார் பாடசாலை கல்வி முறைமையினுள் நிறுவனப்படுத்தல் எனும் கருப் பொருளில் தேசிய ஒருங்கிணப்பு நல்லிணக்க அமைச்சின் அனுசரiணில் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (17) மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் பொன்தானா மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சுhர்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு இராஜாங்க அமைச்ர் ஏ.எச்.எம்.பௌஸி, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா பிரதேச செயலாளர்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தலைமையுரையாற்றுகையிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டின் மிக நீண்ட காலமாக பிரயோகிப்போயிருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற பொறுப்பை ஏற்று இருக்கின்ற எங்களுடைய மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களும் அதே போல் முன்னால் மேன்மை தங்கிய ஜனாதிபதியாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா  அவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கூடாகவும் செயற்பாடுகளுக்கூடாகவும் இந்த நாட்டினுடைய சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தவகையிலே இந்த தேசிய நல்லினக்க அமைச்சினுடைய செயற்பாடுகளை மிகப் பெரிய செயற்பாடாக இந்த கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.நல்லினக்கம் என்று சொல்லப்படுகின்ற விடயம் வார்ததைகளினால் நிறைய இடங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்று வரை நாங்கள் எல்லோரும் இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து சமூகமும் எப்படி பிரிந்து வாழ்வது என்பது பற்றித் தான் கற்றுக் கொண்டிருக்கிறது.

எப்படி எங்ஙளுக்குள்ளே பிரிவுகளை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றித் தான் பேசுக் கொண்டிருக்கின்றோமே அல்லாமல் நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறையை காண்பதற்காக தயங்கி நிற்பது தான் நடைமுறையில் இருக்கின்ற பாரிய சவாலாக இருக்கின்றது.நான் இத்தாலி நாட்டில் எனது மேற்படிப்பை மேற்கொண்ட போது அந்த நாட்டின் பல்கலைக்கழக பேராசிரியர் என்னிடம் கூறினார்கள்.

25 மேற்பட்ட மொழிகளில்  பேசிக்கொண்டிருக்கின்ற இத்தாலி நாட்டில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். நாங்கள் இப்படி வாழ முடியாது.  இந்த 25 மொழிகளையும் சேர்த்து ஒரு மொழியாக உருவாக்கி இத்தாலி என்ற மொழிளை ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார்கள்.

அந்த 25 பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு இத்தாலி என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டு இன்று ஒரு மொழியை ஒரு அரசை ஒரு சட்ட அமைப்பைக் கொண்ட ஒரு நாடாக இத்தாலி இருந்து கொண்டிருக்கின்றது. ஆக நான்கு இனங்களையும் நான்கு மதங்களையும் இரண்டு மொழிகளையும் கொண்டிருக்கின்ற இந்த சின்ன நாட்டிலே நாங்கள் மேலும் மேலும் பிரிந்து வாழ்வதற்குரிய வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

ஒரு நாட்டிற்குள்ளே ஒரு மாகாணத்துக்குள்ளே ஒரு மாவட்டத்திற்குள்ளே ஒரு பிரதேசத்துக்குள்ளே நாம் எப்;படி பிரிந்து செல்லலாம் என்பதைத் தான் சிந்திக்க முயல்கின்றோம்.எனவே தான் இந்த நாட்டுக்குள்ளே நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற எங்களுடைய மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களும் அதே போல் இந்த நல்லினக்கத்தின் அமைச்சராக இருக்கின்ற கௌரவ மனோகணேசன் அவர்களும் அதே போல் இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற மிகவும் மூத்த அரசியல்வாதியாகிய பௌசி அவர்களும் இந்த பொறுப்பு மிக்க தொலை தூரம் மிக்க கடமையை தங்களின் தோள்களில் ஏற்று இருக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் மட்டும் செயற்பட முடியாது. அவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது.இந்த நாட்டிலே இருக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் இந்த நாட்டிலே வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் குறிப்பாக இளைய சமூகம், இளைய தலைமுறை இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் பேச வேண்டும் அப்போது தான் இந்த நாட்டின் அமைதியும் நல்லினக்கமும் சமாதானமும் அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் ஏற்படும் ஏற்படும்.

SHARE

Author: verified_user

0 Comments: