23 Jul 2017

மட்டு ரயிலில் மோதி இளைஞன் பலி

SHARE
வியாழக் கிழமை (20) நண்பகல் 1 மணியளவில் மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரத்தில் மோதுண்டு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவக்குட்பட்ட திராய்மடு எனும் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இறந்தவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

               
ரயிலில் மோதுண்டவரின் சடலம் புகையிரத அதிகாரிகளினால் சம்பவ இடத்திலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணைகளின் பின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: