23 Jul 2017

சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் நலன்புரி அமைச்சினால் ஊடகவியலாளர்களை விழிப்புணர்பூட்டும் நிகழ்வு

SHARE
சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் நலன்புரி அமைச்சினால் ஊடகவியலாளர்களை விழிப்புணர்பூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் .நவேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது.
இச்செயலமர்வானது முழுநாள் செயலமர்வாக நடைபெற்றது.மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது "உளத்தாக்கமும் ஊடக விளம்பரங்களும்" எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட  பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர் டான்- சுந்தராஜா அவர்களும், மாவட்ட செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு மாவட்ட உத்தியோகஸ்தர் வீ.குகதாசன் அவர்கள் "மனநல ஊடகத்தின் பாதிப்புக்களும்;குற்றவியல் தண்டனை விடயங்களும் " எனும் தலைப்பில் பல்லூடகத்தின் உதவியுடன்  தெளிவூட்டப்பட்டது.

இச்செயலமர்வில் மனவெழுச்சி குறைபாடுகள்,ஊடகத்தில் உளரீதியான குறைப்பாட்டுத்தாக்கங்கள்,வன்முறையை கையாளுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டத்தில்,அகில இலங்கை ரீதியில் சிசிச்சை வழங்கும் இடங்கள்,மனநோய் பாதிப்பு காரணமாக சமூகத்தில் ஏற்படும் விளைவுகள்,சிறுவர் துஸ்பிரயோகங்களும்;அதன் தண்டணைகளும்,போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: