23 Jul 2017

மலேசியா நாட்டின் உயர்கல்வி படிப்புக்களை இலங்கை மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்

SHARE
மலேசியா நாட்டின் உயர்கல்வி படிப்புக்களை இலங்கை மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்" எனும் விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ. நிஸாம் அவர்களினதும் கல்வித்திணைக்களத்தின் அனுசரணையிலும், வழிகாட்டல்களிலும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் இந்த விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வு மட்டு.வலயக்கல்வி பணிப்பாளர் .பாஸ்கரன் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (20.7.2017) நண்பகல் 12மணி முதல் 1.45 மணி வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில்  நடைபெற்றது.


மலேசியா நாட்டில் ஒன்பது பல்கலைக்கழங்களின் பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ், புனித மிக்கல் கல்லூரியின் முதல்வர் பயஸ் ஆனந்தராசா,மற்றும் பிரதியதிபர் இராசதுரை பாஸ்கர்,உட்பட வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை,புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை,புனித மிக்கல் கல்லூரி,மெதடிஸ்த மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டார்கள்.இதன்போது மலேசியா நாட்டில் காணப்படும் உயர்கல்வி நிறுவனங்கள்,நிறுவனங்களில் காணப்படும் சலுகைகள்,வெகுமதியின் கூடிய கல்விச்செயற்பாடுகள்,தொழில் வாய்ப்புக்கள்,அதற்கான தொழில்வாய்ப்புக்கள்,அடிப்படைத் தகமைகள்,மேலதிக வசதி வாய்ப்புக்கள்,இதன்போது உயர்கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்களினால் ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.மலேசியா நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தின் கல்வி கற்பதற்கு இதன்போது மாணவர்களின் தெரிவும் இடம்பெற்றது.



SHARE

Author: verified_user

0 Comments: