18 Jul 2017

இலங்கை கால் பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக என்.ரீ. பாறூக் தெரிவு

SHARE
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், கழகத்தின் உப தலைவரும் காத்தான்குடி கால் பந்தாட்டச் சங்கத்தின் தலைவருமான  என்.ரீ. பாறூக் கடந்த ஜுன் மாதம் இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது கிழக்கு மாகாணத்திலிருந்து  சுமார் 80 ஆண்டுகளின் பின் தமிழ் பேசும்  மக்களில் ஒருவருக்கு  கிடைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரை  கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் பௌசில்  இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் லக்கி ஸ்டார் கழகத் தலைவர் என்.எம். அப்துல் மஜீத் உட்பட பல்வேறு விளையாட்டு கழகங்களின் முக்கியஸ்தர்கள் நினைவுக் கேடயங்களை வழங்கி கௌரவித்தனர்.

கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றினை  பிறப்பிடமாகவும் காத்தான்குடியினை வசிப்பிடமாகவும் கொண்ட   பாறூக்  கால்பந்தாட்ட துறையில் சுமார்  40 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபாடு கொண்டவர் மாத்திரமின்றி பல விருதுகளையும் பெற்றிருப்பதுடன், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல கால்பந்தாட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதிகளையும் நிலைநாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட் சங்கத்தின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பாறூக் மட்டக்களப்பு மாவட்ட  கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள்  சங்கம் மற்றும் மத்தியஸ்தர்களின் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்த பெருமையையும் பெற்றுள்ளார்.




SHARE

Author: verified_user

0 Comments: