(கிருஷ்ணி இஃபாம்)
வெளிநாடுகளில் இருந்து அரிசியை பெற்றுக்கொள்வதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளது. இதன் நிமித்தம் இந்தியா,பாக்கிஸ்தான், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு அரிசியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக கைத்தொழில் மற்றும்;; வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகளால்; அரிசி விவகாரம் தொடர்பாக பாக்கிஸ்தான், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்ட்ட சுற்றுப்பயணத்தின் முடிவினை ஏனைய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கும் போதே அமைச்சர் இதனை சுருக்கமாக விளக்கினார்.
இவ்அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் தொடர்ந்து விளக்கம் அளிக்கையில்:“தாய்லாந்து இலங்கையின் அத்தியாவசிய அரிசி கோரிக்கையை ஏற்று எந்த நேரத்திலும் ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது. தாய்லாந்து அரசாங்கம் எமது அரிசி விவகாரம் தொடர்பான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்தற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். சிறந்த விலைக்கு பாங்காங்கில் இருந்து உயர் தரமான அரிசிக்கு நாங்கள் மேற்கோள்களைப் பெற்றுள்ளோம் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு வர்த்தகம் வலிமைக்கு இது ஒரு அடையாளம் ஆகும். அத்துடன் பாகிஸ்தான் மியான்மார் அரசாங்கங்களும் எமது அரிசி கோரிக்கைகளுக்கு உடனடி பதில் வழங்கியமைக்கு நாங்கள் எமது நன்றயை தெரிவிக்கிறோம். தாய்லாந்து, பாக்கிஸ்தான், மியான்மார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்படும் மொத்த அரிசி இப்போது 255,000 மெற்றிக்தொனாக காணப்படுகின்றது. இவை அரச மற்றும் தனியார்துறைகளுடனான வர்த்தகத்தினுடான வர்த்தகத்திற்கும் இட்டுச்செல்கின்றது.
மேற்படி எனது அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் தாய்லாந்தின் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளினை கடந்த 12 - 13 ஆம் ஆம் திகதி பாங்காக்கில் நேரடியாக சந்தித்தனர், அதன்போது 200,000 மெற்றிக்தொன் அரிசியை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். அதன் பின்னர் மாதிரி சோதனைகளினை மேற்கொண்டு உடனடியாக 100,000 மெற்றிக்தொன்; நாட்டரிசிக்கான கட்டளை பிறப்பித்தனர். மெற்றிக்தொன் ஒன்றுக்கு 425 அமெரிக்க டொலரை தாயலாந்து; அரசாங்கம் விலைபட்டியல் இட்டது. தாய்லாந்திலிருந்து அரிசி இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் இலங்கை ரூபாவில் இதன் விலை ஜூலை 18 ஆம் திகதி ரூபா. 65.31 ஆகும்.
மேலும் தாய்லாந்தில் இருந்து சுமார் 100,000 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசியை பெற்றுக்கொள்வதற்கான விலை வரிசையில், ஒப்பீட்டளவில் பாங்காக் விலை மியான்மரை விட அதிகமானதாக காணப்பட்டதால் இலங்கை அதிகாரிகளால் தாய்லாந்திலிருந்து பெற்றுக்கொள்ளவிருற்த அரிசி தற்காலிகதாக நிறுத்தப்பட்டது.
பாங்கொக்கிலிருந்து 100000 மெற்றிக்தொன் நாட்டரிசிக்கான ஒப்பந்தக் கடிதங்கள் மற்றும் கொள்வனவு சம்பந்தமான ஆவணங்கள் கொழும்பில் வெளியிடப்படவுள்ளன. மற்றும் பாங்கொக்கில் இருந்து கப்பல் இறக்குமதி தொடர்பான நடவnடிக்கைகள் எப்போது வேண்டுமானாலும் கொழும்பில் அமைந்துள்ள தாய்லாந்து சட்ட ஆணையாளர் நாயக அலுவலகம் தொடங்கலாம்.
அரிசி கையிருப்பை பேணுதல் மற்றும் எதிர்கால அரிசி தேவையைக் கண்டறிதல் தொடர்பான விசேட நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தேவைக்கேற்ப அரிசியை இறக்குமதி செய்தல் மற்றும் இதற்காக தனியார் துறையினரை தயார்செய்தல் தொடர்பாக எமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருகின்றது” என்றார் அமைச்சர்.
இதேவேளை அமைச்சர் ரிஷாடின் அறிவுறுத்தலின் கீழ், உணவு தொழில்நுட்ப வல்லுனரை உள்ளடக்கிய அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொகுஹெட்டி தலைமையிலான மற்றொரு அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள்;, ஜூலை 7 ம் திகதி பாக்கிஸ்தான் மற்றும் மியான்மாருக்கு சென்று ஜூலை 14 ஆம் திகதி வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நாட்டுக்குக்கு திரும்பினார். மியான்மர் அரசாங்கம் 30000 மெற்றிக்தொன் வெள்ளை அரிசி உடனடியாக வழங்க ஒப்புக்கொண்டது என இக் குழு அமைச்சருக்கு விக்கமளித்தது.
இதன் விநியோக விலை ஒரு தொன்னுக்கு 290-350 அமெரிக்க டொலர்கள் ஆகும். இறக்குமதி செய்யப்படும் முன்னர் விநியோக விலை ஜூலை 18 திகதி- ஒரு கிலோ அரிசியின் விலை ரூபா. 44.57 முதல் ரூபா. 53.80 வரை ஆகும். செப்டம்பர் மாதத்தில் மற்றொரு பகுதி நாட்டரிசி தொகுதியினை வழங்குவதற்கு மியான்மார் ஒப்புக்கொண்டதுடன் எமது தேவைக்கான தொகை மற்றும் விலையினையும் ஏற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் 25000 மெற்றிக்தொன்; வெள்ளை அரிசி உடனடியாக வழங்கவுள்ளது. இதன் இறுதி விலைக்குறிப்பு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. செப்டம்பர் மாதம் மற்றொரு 100,000 மெற்றிக்தொன் நாட்டரிசி தொகுதியை வழங்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
மற்றொரு 100,000 மெற்றிக்தொன்; அரிசி தொகுதியினை இந்தியாவின் தனியார் துறை விநியோகஸ்தர்களிடமிருந்து இலங்கை அரசு பெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள்; உடனடியாக கேள்வி பத்திரங்கள் மீதான சேகரிப்பபணிகளினை தற்போது மேற்கொணடு வருகின்றனர்.
கடந்த மாதம் இலங்கைக்கான தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் தூதுவர்களையும் பாக்கிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகரையும் அமைச்சர் ரிஷாட் சந்தித்து அரிசி விநியோகம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்ததைகளை நடத்தினார்.இவர்கள் இலங்கைக்கு அத்தியாவசியமான அரிசியை வாங்குவதற்கான முயற்சிக்கு உடனடி ஆதரவினை வழங்க முன்வந்தனர்.
அமைச்சின் கீழ் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் அரிசி இறக்குமதி மற்றும் விநியோகத்திற்கான அரசாங்க நிறுவனமாக உள்ளது.

0 Comments:
Post a Comment