23 Jul 2017

மீண்டும் யுத்தம் ஒன்று இடம் பெறாது – மட்டக்களப்பில் அமைச்சர் ஹரிசன்

SHARE
30 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் வெடிச்சத்தங்களையும், குண்டுச் சத்தங்களையும்தான் கேட்டுக் கொண்டு எல்.ரீ.ரி மற்றும் அரச படை ஆகிய இரண்டு பக்கமும் வேதனைகளை அனுபவித்து வந்துள்ளார்கள். தற்போது அந்த அச்சம் முற்றாக நீக்கப் பட்டுள்ளது. யுத்ததினால் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என முனைந்தாலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இப்போதுள்ள சில அரசியல் தலைவர்கள் மீண்டும் ஒரு இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்து அவற்றினூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இந்தப்பிரதேசத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று இடம்பெறாது என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 
என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் 300 மில்லியன் நிதியொதுக்கீட்டில் அமையவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (22) களுதாவளையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது மாங்குளத்திலும் மற்றுமொரு பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். இன்றுமொரு மாத காலத்தில் கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றைத் திறந்து வைக்கவுள்ளோம். தெற்கிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வேண்டுகோளின் பெயரில், தற்போது வடக்கு கிழக்கிற்கும் விஸ்த்தரிக்கப்பட்டுள்ளன. இதுதான் நல்லாட்சியின் பிரதிபலன்கள். 

நல்லாட்சியினைக் கொண்டு வருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மாத்திரமின்றி முழு நாட்டிலுமுள்ள தமிழ் மக்களும் ஆதரவு வழங்கினர். 10 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் ஒருபோது நினைத்ததில்லை நாங்கள் மட்டக்களப்புக்கு வருகைதரலாம் என்று. ஒரு காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித குரோதம் வெளிவந்திருந்தன. இங்கிருந்த எல்.ரீ.ரி இயக்கத்திற்கு குரோதத்தை வெளிப்படுத்தினோம். சிங்கள மக்கள் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் எல்.ரீ.ரி உறுப்பினர்களாகவே கருதினர். இதனால் தெற்கிலுள்ள சில அரிசியல் கட்சிகள் அரசியல் இலாபம்பெற முயற்சித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது. ஜனாதிபதியும், பிரதமரு இணைந்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என எமக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.

30 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் வெடிச்சத்தங்களையும், குண்டுச் சத்தங்களையும்தான் கேட்டுக் கொண்டு எல்.ரீ.ரி மற்றும் அரச படை ஆகிய இரண்டு பக்கமும் வேதனைகளை அனுபவித்து வந்துள்ளார்கள். தற்போது அந்த அச்சம் முற்றாக நீக்கப் பட்டுள்ளது. யுத்ததினால் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என முனைந்தாலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இப்போதுள்ள சில அரசியல் தலைவர்கள் மீண்டும் ஒரு இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்து அவற்றினூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர்.இந்தப்பிரதேசத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று இடம்பெறாது என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எனவே இங்குள் விவசாயிகளின் காய் கறிகள், பழ வழகைகள் போன்ற வற்றை இலகுவில் விற்பனை செய்யக் கூடியவகையில்தான் இங்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுகின்றது. இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய விடையங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.

கிழக்கு மகாணசபையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதுபோல் இங்குள்ள பால் பண்ணையாளர்களின் பால் ஒரு துளிகூட சிந்தாமல் மில்கோ நிறுவனம் அவற்றைக் கொள்வனவு செய்யும். அதுபோல் சிறு கைத்தொழில்களையும், விருத்தி செய்ய நாம் முன்வந்திருக்கின்றோம். பாகிஸ்த்தானிலிருந்து கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கறவைப்பசுக்களில் பெரும் பகுதியை கிழக்கு மாகாணத்திற்கு வழங்க உத்தேசித்துள்ளோம். இதனூடாக பாலுற்பத்திய மேலும் அதிகரிக்கலாம்.

மட்டக்களப்பிலுள்ள மக்களுக்கும். மாணவர்களுக்கும் நல்ல திறமைகள் இருக்கின்றன. அதன் காரணமாகத்தான் இந்த மண்ணோடு போராடி விவசாயத்தை மேற்கொள்கின்றார்கள்.எனவே இந்த பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பிரதமரின் கரங்களால் இதனைத் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: